4 நாட்களில் பெரிய மாற்றம்.. தமிழகம், ஆந்திராவிற்கு அதிகம் அனுப்பி வைக்கப்பட்ட ஆக்சிஜன் ரயில்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அண்மைக் காலத்தில் தென் மாநிலங்களுக்கு அதிகம் சென்று வருகின்றன. ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்படுவது கடந்த நான்கு நாட்களில் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது.

ஆக்சிஜன் தேவைப்படும் கோவிட் -19 நோயாளிகளுக்காக மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச்செல்லும் ரயில்கள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 1,142 டன்களை வழங்கி உள்ளன. முன்னதாக மே 20 அன்று 1,118 டன்கள வழங்கி இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி முதல் முறையாக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்க தொடங்கியது. இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று வரை 247 ரயில்களில் 977 க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 16,023 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே வழங்கியுள்ளது.

ரயில்வே ஆரம்பம்

ரயில்வே ஆரம்பம்

கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கத்தில் டெல்லி மற்றும் மும்பைக்கு அவசரகால பொருட்களை வழங்குவதை ஆரம்பித்த ரயில்வே, வைரஸ் இந்தியாவின் பல கிராமப்புற பகுதிகளுக்கு பரவியதால், ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை ஆரம்பித்தது.

அதிக ஆக்சிஜன் ரயில்கள்

அதிக ஆக்சிஜன் ரயில்கள்

ரயில்கள் இதுவரை (திங்கள் வரை) விநியோகித்த மொத்த ஆக்சிஜனில் 8,249 டன் - டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு வந்துள்ளன. சனிக்கிழமை அன்று 80 டன் ஆக்சிஜன் அஸ்ஸாமிற்கு சென்றது. ஆந்திராவில் சமீபத்தில் ஆக்சிஜன் விநியோகம் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை (மே 20) வரை ஒட்டுமொத்தமாக 292 டன் பெற்றது. திங்களன்று, இந்த எண்ணிக்கை 730 டன்னாக உயர்ந்தது. அதாவது 150 சதவீதம் அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை வரை தமிழகம் 1,024 டன் ஆக்சிஜன் பெற்றது, கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிட்டால் தமிழகத்திற்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுவது 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா

கர்நாடகாவிற்கு திங்கள் கிழமை நிலவரப்படி ஆக்சிஜன் 1,063 டன் கிடைத்தது, அம்மாநிலம் வியாழக்கிழமை வரை 640 டன் ஆக்ஸிஜனைப் பெற்ற நிலையில் தற்போது 66 சதவீதம் அதிகரித்துள்ளது.

தெலுங்கானா வியாழக்கிழமை வரை 772 டன் பெற்றது; திங்கள் இறுதியில், அந்த எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்து 976 டன்னாக உயர்ந்துள்ளது. பெரிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமான கேரளாவிற்கு வியாழக்கிழமை வரை 118 டன் கிடைத்தன. நான்கு நாட்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை 246 டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது கேரளாவிற்கு ஆக்சிஜன் செல்வது 108 சதவீதம் அதிகரித்துள்ளது .

ஏன் தேவை அதிகரிப்பு

ஏன் தேவை அதிகரிப்பு

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட தென் மாநிலங்களில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த மாநிலங்களுக்கு (ஆக்ஸிஜன்) நிறைய ஆக்ஸிஜனைத் திருப்பிவிட்டோம்" என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

ஏப்ரல் 27 முதல் திங்கள் வரை நிலவரப்படி டெல்லிக்கு 4,600 டன் கிடைத்தது; வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது டெல்லிக்கு ஆக்சிஜன் செல்வது 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்திற்கு 3,649 டன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஹரியானாவிற்கு 1,759 டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. ஆக்ஸிஜனின் பெரும்பகுதி டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா அகிய மூன்று மாநிலங்களுக்குத்தான் பெரும்பகுதி ஆக்சிஜன் வந்துள்ளது,.

கிழக்கு மற்றும் மேற்கு

கிழக்கு மற்றும் மேற்கு

நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஹப்பா, பரோடா மற்றும் முந்த்ரா மற்றும் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ரூர்கேலா, துர்காபூர், டாடாநகர் மற்றும் அங்கூல் ஆகியவற்றிலிருந்து தான் பெரும்பாலான ஆக்ஸிஜன் எடுக்கப்படுகிறது. இந்த வாரம் வரும் யாஸ் புயல் காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு தடையின்றி மின்சாரம் உறுதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. எனினும் வழக்கமான பாதைகளில் ஆக்சிஜன் ரயில்களை செல்வது பாதிக்கப்படலாம். எனவே மாற்றுப்பாதைகளில் ஆக்சிஜன் ரயில்களை அனுப்பவும் ஏற்பாடு நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+