டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயர் சாதிக்கான இடஒதுக்கீடு.. நிலைப்பாட்டை திடீரென மாற்றும் காங்கிரஸ்.. சூப்பர்.. வரவேற்ற ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு குறித்து கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஏற்கெனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தேசிய அளவில் காங்கிரஸ் கூறியிருந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் இதனை எதிர்ப்பதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு.. நவ.12-ல் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி! உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு.. நவ.12-ல் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

மறுபரிசீலனை

மறுபரிசீலனை

இவ்வாறு இருக்கையில் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், "பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது தொடர்பாக காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யும் என அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த இடஒதுக்கீட்டில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 'சின்ஹோ கமிஷன்' அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவு மக்களில் 82 சதவிகிதமானோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர்.

காங்கிரஸ்தான்

காங்கிரஸ்தான்

இந்த ஏழைகள் புதியதாக ஒரு வகுப்பையே(Class) உருவாக்குகிறார்கள். இந்த 82 சதவிகித ஏழைகளை சட்டத்தால் விலக்கி வைக்க முடியுமா? இது அக்கறையுடன் ஆராய வேண்டிய கேள்வி" என்று கூறியுள்ளார். முன்னதாக உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை விடுத்திருந்த காங்கிரஸ் அதில், "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாகவே தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2005-2006 காலகட்டத்தில்தான் 'சின்ஹோ கமிஷன்' அமைக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டம்

அனைத்துக் கட்சி கூட்டம்

இந்த கமிஷன் விரிவாக ஆய்வு செய்து 2010ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இதனை அடிப்படையாக கொண்டு 2014ல் மசோதா உருவாக்கப்பட்டது. ஆனால் இதனை சட்டமாக்க பாஜகவுக்கு 5 ஆனது" என்று ஜெயராம் ரமேஷ் கூறியிருந்தார். அதேபோல தீர்ப்பை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள திமுக கூட்டணியில் திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருந்தன. அதேபோல காங்கிரஸின் நிலைப்பாட்டை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டன. இதற்கிடையில் நேற்று திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

சீராய்வு மனு

சீராய்வு மனு

இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை ஆதரவு தெரிவித்திருந்தார். இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு என்று காங்கிரஸ் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இவ்வாறு இருக்கையில்தான் தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ப.சிதம்பரமும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

English summary
The Congress has said it will re-examine the party's stand on the recent Supreme Court verdict on the 10% reservation for economically backward upper castes. Senior leader of the party P. Chidambaram has said that he welcomes this announcement of the Congress. At the national level, the Congress had already said that it welcomed the Supreme Court verdict. However, it is noteworthy that Assembly Congress Party leader Selvaperunthagai had said that he would oppose this in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X