அரசியல் தலைநகர் டூ ராணுவ தலைநகர்! ரவால்பிண்டி, லாகூர்! பாகிஸ்தானின் இருதயத்தை துளைத்த இந்திய ஏவுகணை
டெல்லி: பாகிஸ்தானின் ராணுவ தலைநகர், அரசியல் தலைநகர், நிர்வாக தலைநகர் என்று அழைக்கப்படும் முக்கிய நகரங்களை இந்திய ஏவுகணைகள் அடித்து நொறுக்கி உள்ளது. இந்திய ராணுவம் சார்பாக டிரோன்கள் மட்டுமன்றி ஏவுகணைகளும் அடித்து வீழ்த்தப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இருதயம் போன்ற நகரம் ஆகும். அரசியல் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் அரசியலை நிர்ணயிப்பதே லாகூர்தான். லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோலம் ராவல்பிண்டியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் பகுதி ஆகும். பாகிஸ்தானின் மிக முக்கிய ராணுவ தளவாடம் ஆகும். இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.

தாக்குதல் நடப்பது ஏன்?
முக்கிய பாகிஸ்தானிய நகரங்களில் இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய இராணுவ விமானத் தளங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. சியால்கோட் மற்றும் நரோவலில் உள்ள பாகிஸ்தான் நிலைகளிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களில் இந்தியா வானிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரை இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதை இந்தியா உடனுக்குடன் தடுத்தது.
ஸ்ரீநகர் அருகே 6-7 ட்ரோன்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்ரீநகரில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள்
இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் மூலம் அட்டாக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் உள்ளே தாக்குதல்களை நடத்த இந்தியா சுசைட் ஏவுகணைகள் எனப்படும் "Suicide Drones" ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளன. இதை loitering munitions என்பார்கள். அதாவது இங்கும் அங்கும் மாறி மாறி மிதந்து சென்று அதன்பின்னர் தாக்கும் ஏவுகணைகள்.
நீங்கள் ஏவுகணை தாக்குதல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம். அதில் ஒரு டார்கெட் செய்யப்பட்டால்.. அது நேரடியாக சென்று தாக்கும். ஆனால் ஒரு ஏவுகணை பறந்து செல்கிறது. அதில் டார்கெட் கொடுக்கப்படவில்லை. மாறாக பறந்து செல்லும் போதே டார்கெட்டை கண்டுபிடிக்கிறது. இதற்காக அந்த ஏவுகணை இங்கும் அங்கும் நகர்ந்து செல்கிறது.
அதாவது அதில் இருக்கும் கேமராக்கள், சென்சார்கள் மூலம் தீவிரவாத கேம்ப் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு ஆள் இல்லாத டிரோன் போல தீவிரவாத கேம்ப்பை இதை கண்டுபிடிக்கிறது. அப்படி கண்டுபிடித்த பின் இந்த ஏவுகணை அங்கே விழுந்து வெடிக்கிறது என்றால் எப்படி இருக்கும். இதுதான் "Suicide Drones".
அதாவது ஒரே சமயத்தில் ட்ரோன் போல பறந்து டார்கெட்டை கண்டுபிடித்து அதன்பின் அங்கேயே விழுந்து ஏவுகணை போல அட்டாக் செய்யும் என்பதால் இதை "Suicide Drones" என்கிறார்கள்.
இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதைத்தான் இன்று தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். இது சிறிய அளவில் இருந்தாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத்தான் பாகிஸ்தான் உள்ளே இந்தியா பயன்படுத்தி உள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications