ஜம்மு காஷ்மீரில் குடியிருப்பு பகுதியில் தாக்குதல்.. அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்! சீறும் இந்தியா
டெல்லி: இந்தியா மீது பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் உரியில் மக்கள் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் குண்டு வீசி தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் வீசிய குண்டு மக்கள் குடியிருப்பில் விழுந்திருந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ராணுவம் தெரிவித்திருக்கிறது.

தற்போது வரை ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மீது பாகிஸ்தான் குண்டு வீசியிருக்கிறது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அம்சம் இடை மறித்து தாக்கி அழித்திருக்கிறது. ஏவுகணைகள் மட்டுமல்லாது சிறிய ரக ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற ட்ரோன்களின் விலை சில லட்சங்கள்தான் வரும். ஆனால் இதனை இடை மறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு கவசத்தின் விலை கோடி கணக்கில் இருக்கும். இந்தியாவிடம் எஸ் 600 எனும் பாதுகாப்பு கவசம் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் துண்டிப்பு மூலம் இலக்குகளை திசை திருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கிடைத்திருக்கும் தகவல், பதான்கோட் பகுதியில் பாகிஸ்தானிய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றன.
ஜம்முவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. மட்டுமல்லாது பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பீரங்கி குண்டுகளை இடைமறிப்பது கடினம் என்பதால் இது கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்திய ராணுவம் லாகூர் மற்றும் காராச்சியின் சில பகுதிகளை தாக்க தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications