பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு.. இந்தியாவின் முடிவு போரின் அறிகுறியா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்? காரணம்?
சென்னை: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் என்னென்ன?
(i) 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும். சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.
(ii) பாகிஸ்தான் - இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி முறையான ஒப்புதல்களுடன் சென்றவர்கள் 01 மே 2025 க்கு முன் அந்த வழியாக திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
(iii) சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது.
(iv) டெல்லி உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள பாதுகாப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆலோசகர்கள் "தனிநபர் அல்லாதவர்" என்று அறிவிக்கப்படுகிறார்கள். இதன் அர்த்தம், இத்தனை காலம் அவர்கள் தூதரக பணிகள் அடிப்படையில் இங்கே இருந்தனர். இனி அந்த அனுமதி அவர்களுக்கு கிடையாது. தனியாக இனி விசாவும் வழங்கப்படாது. இதனால் அவர்கள்உடனே வெளியேற வேண்டும். இதற்கு 1 வாரம் அதிகபட்சம் டைம் தரப்படும். அதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷனில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு / கடற்படை / விமானப் படை ஆலோசகர்களை திரும்பப் பெறுகிறது. அந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாகக் அறிவிக்கப்படுகிறது.
(v) பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த பலம் தற்போதுள்ள 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும்.
போருக்கு தயாராகிறதா இந்தியா?
இதில் கவனிக்க வேண்டிய நடவடிக்கை என்று பார்த்தால் சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது என்ற நடவடிக்கைதான்.
பொதுவாக போர் காலத்தில்தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் இப்போது எடுக்கப்பட்டது உள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. முக்கியமாக பின்வரும் 6 விஷயங்கள் இந்த முடிவிற்கு பின் இருக்கலாம்.
1. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
2. நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம்.
3. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் தாக்குதலுக்கு ஆளாகலாம். இதனால் கலவரங்கள் ஏற்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம்.
4.. பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்தலாம்.
5. தார்மீக ரீதியாக பாகிஸ்தான் உடன் உறவை துண்டிக்க இந்த முடிவை இந்தியா எடுத்திருக்கலாம்.
6. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என் கவுண்டர் செய்யலாம்.
7. அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.












Click it and Unblock the Notifications