பான் கார்டு, ஆதார் எண் இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்- இந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணாதீங்க!
டெல்லி: பான் எண், ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர கணக்கு எண் பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. இதற்காக பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது பான், ஆதார் எண்களை இணைக்க மார்ச் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பான், ஆதார் எண் இணைப்புக்கான அவகாசம் ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பான் கார்டுகள் அல்லது பான் அட்டை என்பது பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு அடிப்படையான ஒன்றாக பான் கார்டு உள்ளது.
ஆதார் கார்டுகள் அதேபோல பொதுமக்கள் அனைவருக்குமான அடிப்படையான அட்டையாள அட்டையாக இருக்கிறது. மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை எண் ஆகியவற்றை இணைக்கும் நடைமுறை தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு இந்த பான், ஆதார் இணைப்பு அவசியம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த பான், ஆதார் இணைப்புக்கு மார்ச் 31-ந் தேதி கடைசி அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அப்படி இணைக்கப்படாத நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பான் கார்டுகள் செயலிழக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது பான் எண், ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க ஜூன் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications