Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லைவில் ஷாக்! நாடாளுமன்ற தாக்குதலுக்கு பின் முக்கிய தடயத்துக்காக மோதிக்கொண்ட நிருபர்கள்! என்ன அது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் அத்துமீறி நுழைந்த நபர்கள் மஞ்சள் நிற ஸ்பிரேயை அடித்தனர். இது நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் இந்த ஸ்பிரே தாக்குதல் தொடர்பான முக்கிய தடயத்துக்காக பத்திரிகையாளர்கள் லைவ் வீடியோவில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் 5 பயங்கரவாதிகள் நுழைந்தனர். இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.

Parliament Attack: Journalist fight over for the smoke canister which used by mens who entered Loksabha

இந்திய வரலாற்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் கருப்பு நாளாக உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் என அனைவரும் 2001 டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து வழக்கம்போல் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. லோக்சபா நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்து மஞ்சள் நிற ஸ்பிரேயை அடித்தனர். மேலும் அவர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினர். இதையடுத்து அவர்களை அங்கிருந்த எம்பிக்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் ஒரு பெண், ஒரு ஆண் என மொத்தம் 2 பேர் மஞ்சள் நிற ஸ்பிரே அடித்தனர். இதையடுத்து அவர்களும் பிடித்து கைது செய்யபப்ட்டுள்ளனர். இதற்கிடையே தான் பிடிபட்ட நபர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிற புகையை அடித்து ஸ்பிரே இருந்த கன்டெய்னருக்காக பத்திரிகையாளர்கள் மோதிக்கொண்டனர். அதாவது மஞ்சள் நிற புகையை லோக்சபா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அடித்த நபர்கள் அது காலியானவுடன் அங்கேயே போட்டுவிட்டு சென்றனர்

இதனை பத்திரிகையாளர் ஒருவர் எடுத்து தனது தொலைக்காட்சியில் லைவ் வீடியோவில் செய்தியாக கொடுத்தார். நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிற புகை என்பது இந்த ஸ்பிரே கன்டெய்னரில் இருந்து தான் அடிக்கப்பட்டது என கூறினார். இதை பார்த்த பிற பத்திரிகையாளர்கள் தங்களின் தொலைக்காட்சியிலும் செய்தி கொடுக்க அந்த ஸ்பிரே கன்டெய்னரை கேட்டனர். ஆனால் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர் வழங்காமல் தனது தொலைக்காட்சியில் லைவ் வீடியோவில் செய்தி வழங்கினார்.

இதையடுத்து மேலும் சில பத்திரிகையாளர்கள் வந்து அவரிடம் அந்த ஸ்பிரே கன்டெய்னரை கேட்டு வாக்குவாதம் செய்து மோதினர். இறுதியாக ஒருவர் வேகமாக வந்து அந்த கன்டெய்னரை பறித்து சென்று தனது தொலைக்காட்சியில் செய்தியாக வழங்கினார். இது அப்படியே லைவ் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பத்திரிகையாளர்களின் செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பொதுவாக குற்றம் நடக்கும் இடத்தில் கிடைக்கும் தடயங்களை யாரும் எடுக்க கூடாது. அதனை போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் கைப்பற்றி ஆய்வு செய்வார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிற ஸ்பிரே அடிக்கப்பட்டு காலியானவுடன் வீசப்பட்ட ஸ்பிரே கன்டெய்னரை பத்திரிகையாளர் எடுத்ததும், அதற்காக பிற பத்திரிகையாளர்கள் மோதிக்கொண்டதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+