நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருந்ததால் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு குழிதோண்டி புதைப்பு- மோடி
டெல்லி: நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருந்ததால் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து குழிதோண்டி புதைத்துவிட்டோம். தனித்தனியாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் என்று லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்றும், இன்றும் அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 26 ம் தேதி அரசியலமைப்பு சாசன நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நம் நாட்டின் அரசியலமைப்பு அமலுக்கு வந்து 75 ஆண்டு ஆனதை பெருமைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு தின சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் உரையாற்றினர். பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, ஆ ராசா உள்பட பல தலைவர்கள் உரையாற்றினர். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றுவது இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் தான் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி இன்று மாலையில் பதிலுரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளதை பெருமையாக கூறுகிறேன். இந்த விவாததத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா பற்றி கூறிய கருத்துகளை புறம்தள்ளி நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.இந்த சாதனையுடன் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை இருந்தது. இந்திய அரசியல் சாசனத்தை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேறி வருகிறோம். நாட்டின் பொருளாதார ஒற்றுமைக்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்தியா ஒரே நாடு என்பதை வலியுறுத்த தான் 370வது சட்ட பிரிவு குழித்தோண்டி புதைக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ’’ என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications