Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா: 10 ஆண்டுகால காங். ஆட்சியில் ஊழல்கள்- பிரதமர் மோடி சாடல்- கொந்தளித்த காங். வெளிநடப்பு

நாடாளுமன்றம் லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் பதில் அளித்தார். பிரதமர் மோடி பதிலளிக்க எழுந்த போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அவரை பேசவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். பிரதமர் மோடியை புறக்கணித்து பிஆர்எஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

Parliament: PM Modi to reply to Presidents Address in Lok Sabha today

ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது உரையில், பாரம்பரியம், நம்மை நமது வேர்களுடன் இணைப்பதுடன், நமது வளர்ச்சி உச்சத்தை அடைவதற்கான நம்பிக்கையும் வழங்குகிறது. அதனால் தான் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது மத்திய அரசு. இன்று ஒருபுறம் நாட்டில் அயோத்தியில் ஆலயம் கட்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நவீன நாடாளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.
ஒரு புறம் கேதார்நாத் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைப்பு, மகா கால் மகா லோக் ஆகியவற்றை நாம் கட்டியுள்ள நிலையில், மறுபுறம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது ஒரு புறம் நாம் நமது புனித யாத்திரை தலங்களையும், வரலாற்று மரபு சின்னங்களையும் மேம்படுத்தி வருகிறோம். மறுபுறம் இந்தியா உலகின் முக்கிய விண்வெளி சக்தியாக மாறிவருகிறது. இந்தியா தனது முதலாவது தனியார் செயற்கை கோளையும் செலுத்தியுள்ளது. ஒரு புறம் ஆதி சங்கராச்சாரியார், பகவான் பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் போன்ற மகான்கள் காட்டிய வழியை நாம் பின்பற்றுகிறோம். மற்றொரு புறம் இந்தியா அதி நவீன அறிவு மையமாக மாறிவருகிறது. ஒரு புறம் காசி தமிழ்ச்சங்கத்தின் மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை நாம் வலுப்படுத்துகிறோம். மறுபுறம் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை போன்ற நவீன நடைமுறைகளையும் நாம் உருவாக்குகிறோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளம், இன்று உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என விரிவாக பேசியிருந்தார்.

Parliament: PM Modi to reply to Presidents Address in Lok Sabha today

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இந்த விவாதத்தின் மீது பல்வேறு கட்சி எம்பிக்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் அதானி விவகாரத்தை கையில் எடுத்தார். ராகுல் காந்தி தமது உரையில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலத்தில் இருந்தே அதானியுடன் நெருக்கமாகவே இருந்தார். இப்போது பிரதமர் மோடிக்கு தோளோடு தோளாக நிற்கிறார் அதானி. 2014-ம் ஆண்டு மோடி பிரதமரான பின்னரே அதானி குழுமம் மேஜிக் வளர்ச்சியை பெற்றது என்றார். அப்போது ராகுல் காந்தியை தொடர்ந்து பேசவிடாமல் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதேபோல திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு தொடங்கி ஒரே கட்சி என்ற திட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது. அந்த திட்டம் ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா என பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்ட மத்திய அரசு மறந்துவிட்டது என்றார்.

இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு நாடாளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். மேலும் பிஆர்எஸ் கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடி உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கொரோனா கால துயரத்தில் இருந்து நாடு மீண்டுவிட்டது. தற்போது பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவாகி உள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சபையில் சிலர் (ராகுல் காந்தி) ஊடக வெளிச்சத்துக்காக இல்லாத விஷயங்களைப் பேசினர். ஜனாதிபதி ஒரு பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவரை அவமரியாதை செய்தனர் என்றார்.

Parliament: PM Modi to reply to Presidents Address in Lok Sabha today

மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலக அளவில் இந்தியாவின் குரல் பல்வீனமாக இருந்தது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடியது. இந்தியாவுக்கான வாய்ப்புகளை நெருக்கடிகளாக காங்கிரஸ் ஆட்சிக் காலம் மாற்றிவிட்டது எனவும் பிரதமர் மோடி சாடினார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+