நாடாளுமன்ற தாக்குதலில் நீளும் தொடர்பு.. மேலும் 2 பேர் அதிரடி கைது.. யார் இவர்கள் தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து வண்ண ஸ்பிரே அடித்து அச்சுறுத்திய வழக்கில் மேலும் 2 பேரை டெல்லி தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அவர்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் ஸ்பிரே அடித்தும் கலர் புகை குண்டுகளையும் வீசினர். இதையடுத்து அவர்களை எம்பிக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பது தெரியவந்தது. அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்த ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) ஆகியோரும் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
லோக்சபா ‛ஸ்பிரே’ அட்டாக்.. விசாரணை குழு அமைத்த மத்திய உள்துறை அமைச்சகம்! தலைவர் யார் தெரியுமா?
இவர்களிடம் டெல்லி தனிப்படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாள் காவலில் போலீசார் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரியான லலித் ஜா நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் கொல்கத்தாவில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அங்கு அவர் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்தார். மேலும் பகத்சிங் மீது தீவிர பற்று கொண்டவராக இவர் இருந்துள்ளார். தற்போது போலீசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‛‛காரணம் இதுதான்’’.. லோக்சபாவில் ‛ஸ்பிரே’ அடித்தது ஏன்? கைதானவர்கள் கூறிய பரபர வாக்குமூலம்.. ஷாக்
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை இன்று டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் மகேஷ், கைலாஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே கைதான 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications