டெல்லி: மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மசோதாவை சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் மட்டுமே கொண்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாள், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டம், இன்று முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது. இத்தொடரில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் பற்றி விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபா மதியம் 1.15-க்கும், ராஜ்யசபா மதியம் 2.15 மணிக்கும் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரத் பெயர் மாற்ற விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற எதிர்பாராத முக்கிய முடிவுகள் குறித்த மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் சிறப்பு கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகளை உடனுக்கு உடன் இங்கே பார்க்கலாம்.
Sep 19, 2023, 4:29 pm IST
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: லோக்சாவை தொடர்ந்து ராஜ்யசபாவும் நாளை காலை வரை ஒத்திவைப்பு
Sep 19, 2023, 4:28 pm IST
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: லோக்சாவை தொடர்ந்து ராஜ்யசபாவும் நாளை காலை வரை ஒத்திவைப்பு
Sep 19, 2023, 3:42 pm IST
2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா- மல்லிகார்ஜூன கார்கே பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு
Sep 19, 2023, 3:11 pm IST
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
Sep 19, 2023, 2:56 pm IST
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி , ‘ சரியான நேரம் வரும் வரை நான் இந்த விவகாரத்தில் கருத்து கூற மாட்டேன்” என்றார்.
Sep 19, 2023, 2:34 pm IST
லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
Sep 19, 2023, 2:31 pm IST
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதா ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற விவககாரங்கள் துறை அமைச்சர் விளக்கம்.
Sep 19, 2023, 2:27 pm IST
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மாநிலங்களவை பிற்பகல் 2.47 மணி வரை ஒத்திவைப்பு
Sep 19, 2023, 2:19 pm IST
புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்.
Sep 19, 2023, 2:11 pm IST
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை. அதனால், நமது கனவு நிறைவேறாமல் போனது. ஆனால், இன்று இதை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். நமது அரசாங்கம் புதிய மசோதாவை இன்று இருஅவைகளிலும் கொண்டு வரப்பட உள்ளது- பிரதமர் மோடி
#WATCH | Special Session of Parliament | PM Narendra Modi speaks on Women's Reservation Bill -- Nari Shakti Vandan Adhiniyam
"Discussion on Women's Reservation Bill happened for a long time. During Atal Bihari Vajpayee's regime Women's Reservation Bill was introduced several… pic.twitter.com/bPTniQvhZr
கொள்கைகள் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் நமது நோக்கம் நாடு முன்னேறி செல்ல வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவத்தை மறந்து முன்னேற்றத்திற்கான பாதையில் பயணிக்க வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
Sep 19, 2023, 1:56 pm IST
தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி!
Sep 19, 2023, 1:52 pm IST
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:52 pm IST
மகளிர் மேம்பாடு என பேசிக்கொண்டிருப்பதை விட அதை செயல்படுத்துவது அவசியம் - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:51 pm IST
அரசின் மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:51 pm IST
விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:40 pm IST
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:40 pm IST
நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:39 pm IST
நாடாளுமன்ற வரலாற்று நிகழ்வுகளை அறியும் வகையில் டிஜிட்டல் புத்தகம் இங்கே உள்ளது - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:35 pm IST
புதிய நாடாளுமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் இதயப்பூர்வமாக வரவேற்கிறேன். பல வழிகளில் இது முன் எப்போதும் இல்லாத நிகழ்வு. அமிர்த காலத்திற்கான விடியல் இதுவாகும் - பிரதமர் மோடி
#WATCH | In the Lok Sabha of the new Parliament building, PM Narendra Modi says, "...I extend my heartiest welcome to all of you in this new Parliament building. This occasion is unprecedented in several ways. This is the dawn of Azadi ka Amrit Kaal..." pic.twitter.com/JbVM43eXLv
விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டு வருவது சிறப்பு வாய்ந்தது - பிரதமர் மோடி
Sep 19, 2023, 1:30 pm IST
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது!
Sep 19, 2023, 1:26 pm IST
புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச தொடங்கியுள்ளார். முன்னதாக சபையை தொடங்கிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
Sep 19, 2023, 1:18 pm IST
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. தற்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து எம்பிக்கள் பேரணியாக புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர்.
Sep 19, 2023, 1:16 pm IST
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் வருகை தந்துள்ளனர்.
#WATCH | Leader of Congress in Lok Sabha Adhir Ranjan Chowdhury, MPs Rahul Gandhi, Gaurav Gogoi and others enter the new building of the Parliament. pic.twitter.com/nFhM8BT3Eg
சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது- பிரதமர் மோடி!
Sep 19, 2023, 12:54 pm IST
நடாளுமன்ற உறுப்பினர்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தர தொடங்கினர். இன்னும் சற்று நேரத்தில் சிறப்புக்கூட்டத் தொடரின் இன்றைய அமர்வு தொடங்க உள்ளது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பேசிய பிரதமர் மோடி, இனி நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல இருக்கிறோம். பழைய நாடாளுமன்றத்தின் கவுரவம் ஒருபோதும் குறையக் கூடாது. வெறும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்று நாம் விட்டு விடக்கூடாது. எனவே, நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால் இதை “ சம்விதான் சதான்” என அறியப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.
#WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "I have a suggestion. Now, when we are going to the New Parliament, its (Old Parliament building) dignity should never go down. This should not be left just as the Old Parliament building. So, I urge that if you… pic.twitter.com/T8izb46MfO
முத்தலாக் தடையால் முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு
Sep 19, 2023, 12:37 pm IST
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தலாக் தடை மசோதா பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கபப்ட்டுள்ளது என்றும், இந்த முத்தலாக் தடையால் முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைத்து இருப்பதாகவும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
READ MORE
9:07 AM, 18 Sep
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது
9:16 AM, 18 Sep
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் 75 ஆண்டுகால அனுபவங்கள் பகிரப்படுகின்றன
9:16 AM, 18 Sep
தேர்தல் ஆணையர் நியமன மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட உள்ளது.
9:17 AM, 18 Sep
நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் இன்றும் நாளை முதல் புதிய கட்டிடத்திலும் சிறப்பு கூட்டத் தொடர்
9:17 AM, 18 Sep
அனைத்து கட்சிக் கூட்டத்தில் நேற்று இந்தியில் நிகழ்ச்சி நிரல் இருந்ததால் திமுக எம்.பி. திருச்சி சிவா கிழித்தெறிந்து ஆவேசம்
9:19 AM, 18 Sep
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் குழு புகைப்படம் எடுப்பதால் மத்திய அரசு ஏதோ ஒன்று செய்ய போகிறது என சந்தேகம்: திருச்சி சிவா எம்பி
9:21 AM, 18 Sep
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்- மத்திய அரசு மறைமுக அஜெண்டா வைத்துள்ளது- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
9:23 AM, 18 Sep
சிறப்பு கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது- எதிர்க்கட்சிகள் அதிருப்தி
9:24 AM, 18 Sep
சிறப்புக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்ப்பு
9:25 AM, 18 Sep
மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க ஒருநாள் ஒதுக்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்
9:25 AM, 18 Sep
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் நேற்று தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன பங்கேற்காததால் சர்ச்சை
9:25 AM, 18 Sep
புதிய நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சீருடைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
9:38 AM, 18 Sep
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற பட்டியலிடப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
9:45 AM, 18 Sep
பிரதமர் மோடி லோக்சபா கூடியதும் காலை 11 மணிக்கு உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
9:47 AM, 18 Sep
நாடாளுமன்ற கூட்டம் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தை எழுப்பிய தெலுங்குதேசம்- மத்திய அமைச்சர்கள் கோபம்
9:50 AM, 18 Sep
75 ஆண்டுகால நாடாளுமன்ற நினைவலைகள் இன்று பகிர்ந்து கொள்ளப்படும்- நாடாளுமன்ற பழைய கட்டிடத்தின் கடைசி நாள் இன்று- மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்
9:50 AM, 18 Sep
பிரதமர் மோடி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்
9:53 AM, 18 Sep
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து இன்று விவாதிக்கப்படும். இன்று நாள் முழுவதும் இது குறித்த விவாதமே நடைபெறும். இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் கடைசி விவாதம் இதுவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்
9:56 AM, 18 Sep
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் பற்றிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஏற்கனவே அஜெண்டாவை அறிவித்து விட்டோம். எனவே, நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி
#WATCH | Delhi: Union Parliamentary Affairs Minister Pralhad Joshi says "Their (Opposition) request for clarification (of agenda) has been made clear in the all-party meeting yesterday. We have already announced our agenda... I request them to attend the Parliament's journey of… pic.twitter.com/nUKKG9tm5E
அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி கொறடா உத்தரவு
Aam Aadmi Party issues whip for all its MPs in the Rajya Sabha
“All members of the Aam Aadmi Party in the Rajya Sabha are hereby, informed that some very important issues will be taken up in the Rajya Sabha in the upcoming special session. In view of this, all members of the Aam… pic.twitter.com/VlGJub54b3
ஆம் ஆத்மி எம்.பிக்கள் ராகவ் சதா மற்றும் சஞ்சய் சிங் நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசிய ஆம் ஆத்மி எம்.பி சுஷில் குமார் ரின்கு இது தொடர்பாக கூறியதாவது:- "இன்று புதிய நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம். அவர்களும் (சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். உரிய மரியாதையை பெற அவர்களுக்கும் உரிமை உள்ளது. எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. நானும் கடந்த கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். எனினும், அது அந்த கூட்டத்தொடருக்கானது மட்டுமே. இன்றைய கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்" என்றார்.
#WATCH | On the suspension of AAP MP Raghav Chadha and Sanjay Singh, AAP MP Sushil Kumar Rinku says "We will enter a new House today, and as they are also elected representatives, they deserve to get their due respect. All Opposition parties have demanded to revoke their… pic.twitter.com/4IyaYLsSPK
ராஜ்யசபாவில் சில முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுவதால் அனைத்து எம்.பிக்களும் தவறாது அவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தனது எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
Aam Aadmi Party issues whip for all its MPs in the Rajya Sabha
“All members of the Aam Aadmi Party in the Rajya Sabha are hereby, informed that some very important issues will be taken up in the Rajya Sabha in the upcoming special session. In view of this, all members of the Aam… pic.twitter.com/VlGJub54b3
இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்
10:22 AM, 18 Sep
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவ்வளவு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது அபத்தமானது. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். சிறப்பு அஜெண்டா கொண்டு வரப்பட்டு அது குறித்து விவாதிக்கவே வழக்கமாக சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும். இது சிறப்பு கூட்டத்தொடரா அல்லது வழக்கமான கூட்டத்தொடரா என்பது பற்றி அரசிடம் தெளிவு இல்லை- காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
#WATCH | Delhi: On the Special Session of Parliament, Congress MP Adhir Ranjan Chowdhury says, "I have been saying this from the beginning that this is quite absurd. Why the government decided to pass so many bills in this Special Session, needs to be clarified by them. Special… pic.twitter.com/Oojh6sUjw4
The second day of the special session of the Parliament will convene today. The meeting will be held in the new Parliament building. It is said that they are planning to pass important bills including the 33 percent reservation bill for women.