அதானி ஊழல்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்றும் போராட்டம்- ராஜ்யசபாவில் வெளிநடப்பு!
டெல்லி: அதானி ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுப்பதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்றும் 2-வது நாளாக இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் ராஜ்யசபாவில் கேள்விகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
அதானி ஊழல் விவகாரத்தில் அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதானி குழுமத்தின் சூரிய சக்தி மின்சாரத்தை மத்திய அரசு நிறுவனம் மூலமாக மாநில மின்சார வாரியங்கள் வாங்குவதற்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்தது; இந்த ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை அதானி குழுமம் பெற்றது என்பதுதான் அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு.

அதானி குழுமத்தின் இந்த முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணியின் வேண்டுகோள். ஆனால் இதனை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று அதானி ஊழல்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இன்றும் நாடாளுமன்றத்தின் முன்பாக பதாகைகளை ஏந்திய படி இந்தியா கூட்டணியின் அதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே ராஜ்யசபாவில் இன்று கேள்விகளை எழுப்புவதற்கு தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி எதிர்க் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications