2024-2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்! ஜூலை 23ல் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்நிலையில், ஜூலை 22ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மீண்டும் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 - 25 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் 23ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும்" என கூறுியுள்ளார். நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications