சீன வெளியுறவு துறை அமைச்சருடன் ஜெயசங்கர் ஆலோசனை.. ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. பரபர பின்னணி
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
Recommended Video
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த ஆண்டு முதலே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்கு பிறகு நிலைமை மோசமானது.
இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தை அதிகளவில் குவித்து வருகின்றனர். இந்நிலையில், தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடி இந்தியக் கிராமங்களுக்குச் சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
இதனால் எல்லையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்
அங்கு தான் அவர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த இந்த மீட்டிங் சுமார் ஒரு மணி வரை நீட்டித்தது. மேலும், இரு நாட்டின் ராணுவ தளபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதையும் இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் ட்வீட்
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் நடைபெறும் துஷான்பேவில் சீனா பாதுகாப்புத் துறை அமைச்சர் வாங் யி உடன் நடைபெற்ற ஒரு மணி நேரப் பேச்சுவார்த்தை முடிந்தது. இந்தியச் சீன எல்லையின் மேற்கு பகுதியில் நிலவி வரும் எல்லை பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமைதி தேவை
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லையில் ஒருதலைபட்சமாக மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எடுத்துரைக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பது இரு நாட்டின் உறவுக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று. மூத்த ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை
செப்டம்பர் 2020ஆண் ஆண்டு கடைசியாக இரு தலைவர்களும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசியதைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், அப்போது எட்டப்பட்ட உடன்படிக்கையைப் பின்பற்றி, எல்லையில் இருக்கும் வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கிழக்கு லடாக்கின் எல்லையில் நடக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். பாங்கோங் ஏரி இருந்து சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதற்றம் தணியுமா
இந்த விஷயத்தில் சீனத் தரப்பு இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டுள்ளது என்றும் இருப்பினும் மற்ற பகுதிகளின் பதற்றமான நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஜெய்சங்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடி இந்தியக் கிராமங்களுக்குச் சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications