டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட் நியூஸ்.. இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி .. இறுதிகட்ட ஒப்பந்தம் தீவிரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம் என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்தார்.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    கொடிய கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

    Pfizer CEO Albert Borla has said the contract for the Pfizer vaccine in India would be finalized soon

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசியும் விரைவில் முழு பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறைக்கும் விதமாக, அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    Pfizer CEO Albert Borla has said the contract for the Pfizer vaccine in India would be finalized soon

    இந்த நிலையில் ஃபைசர் தடுப்பூசிக்கு இந்தியாவுடனான ஒப்பந்தம் கடைசி கட்டத்தில் உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ' இந்தியாவில் எங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற நாங்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம். சீரம் நிறுவனம் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தின் முதுகெலும்பாக தொடரும் அதே வேளையில், நாங்களும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்துக்கு பங்களிப்போம் என்று நம்புகிறோம்.

    சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும்

    ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு கூடுதல் அளவுகளை வழங்கும்,அரசுடனான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம்' என்று ஆல்பர்ட் போர்லா தெரிவித்தார்.

    English summary
    Albert Borla, CEO of the Pfizer company, said the contract for the Pfizer vaccine in India would be finalized soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X