கருப்பு பணத்துக்கு ஏற்றதாக மாறிய ரூ.2000 நோட்டை தடை பண்ணுங்க.. ராஜ்யசபாவை அதிரசெய்த ‛மோடி’ பேச்சு
டெல்லி: ரூ.2000 நோட்டு கருப்பு பணத்துக்கு ஏற்றதாக மாறுகிறது. இதனால் ரூ.2000 நோட்டை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பாஜக எம்பி சுஷில் குமார் மோடி பேசினார். மேலும் ரூ.1000யை தடை செய்துவிட்டு ரூ.2000 ஆயிரம் அச்சடித்ததில் லாஜிக்கே இல்லை என அவர் அதிருப்தியை தெரிவித்தார். இது தற்போது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 17 அமர்வுகளில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாஜக எம்பி சுஷில் குமார் மோடி பேச்சு
இந்நிலையில் நேற்று 4வது நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் இந்தியாவில் விரைவில் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்பியே கூறினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேர விவாதத்தில் பாஜக எம்பியான சுஷில் குமார் மோடி பேசியதாவது:

லாஜிக் இல்லை
நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டது. அதோடு விரைவில் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவலும் வதந்தியாக பரவி வருகிறது. இதில் மக்கள் குழம்புகின்றனர். இதுபற்றி அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 1,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்திய பிறகு 2,000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ததில் எந்த லாஜிக்கும் இல்லை.

கருப்பு பணத்துக்கு சாதகமாக..
தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு போதைப்பொருள் வாங்கவும், பயங்கரவாதத்துக்கு உதவி செய்வதாகவும் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத வர்த்தகங்களுக்கும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு தான் அதிக மதிப்பு கொண்ட நோட்டாக உள்ளது. இது தற்போது கருப்பு பணத்தை பதுக்குவதற்கு ஏற்றதாக மாறிபோய்விட்டது.

வெளிநாடுகளை சுட்டிக்காட்டி
மேலும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இல்லாத நாடுகள் பல முன்னேறி உள்ளன. பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்டவற்றில் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது இல்லை. ஐரோப்பா ஒன்றியத்தில் 500 யூரோ மதிப்புள்ள நோட்டுகளை 2018 ல் நிறுத்திவிட்டது. சிங்கப்பூர் அரசும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி உள்ளது. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால்தான் இத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துள்ளன.

ரூ.2,000 நோட்டை தடை செய்ய வேண்டும்
இதனால் இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்ய வேண்டும். அதாவது ரூ.2,000 ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும். மேலும் மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும்'' என்றார்.

ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இதனால் புதிதாக அச்சிடப்பட்டுள்ள ரூ.500 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாத நிலை உள்ளது. மேலும் ஏடிஎம் இயந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் தான் விரைவில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று சுஷில் குமார் மோடி ராஜ்யசபாவில் பேசியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
முன்னதாக இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 2016 ஆண்டு நவம்பர் 8 இரவில் இந்த அறிவிப்பு வெளியானது. ஒரே நாளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியாகினர். மேலும் இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதமாக(ரூ.14 லட்சம் கோடி) இருந்ததால் பணசுழற்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த மதிப்புக்கு புதிதாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அச்சிட்டால் பல மாதங்கள் ஆகும். இதனால் ரூ.500 நோட்டுடன் ரூ.1000க்கும் பதில் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications