வல்லபாய் பட்டேல் வாசகத்தை சொல்லி.. மோடியை கிண்டல் செய்த பஞ்சாப் முதல்வர்.. என்ன இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் வாசகம் ஒன்றை நினைவு கூர்ந்து பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சனம் செய்துள்ளார்.

பஞ்சாப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்திற்கு பிரதமர் மோடி செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.

பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டக்காரர்கள் போராடிய நிலையில் அவரின் கான்வாய் 20 நிமிடம் பாலம் ஒன்றில் முடங்கியது. இதையடுத்து பிரதமர் மோடி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பினார். இதன் காரணமாக பஞ்சாப் அரசு மீது மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

 பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

இந்த பிரச்சனைக்கு முன்பு வரை தேசிய அளவில் பெரிதாக கவனம் பெறாமல் இருந்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தற்போது தனது பேட்டிகள் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார். முக்கியமாக சில அதிரடி கருத்துக்கள் மூலம் இவர் தன்னை வலுவான தலைவர் என்று பல்வேறு இடங்களில் நிரூபித்து வருகிறார். இவர் மீது பாஜக ஒரு பக்கம் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இதற்கு அவரும் அதிரடி பதில்களை அளித்து வருகிறார்.

 பஞ்சாப் மோடி

பஞ்சாப் மோடி

பிரதமரின் கான்வாயில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட பஞ்சாப் அரசுதான் காரணம். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிதான் பாதுகாப்பு வழங்கவில்லை. சரண்ஜித் சிங் சன்னி மிகவும் மெத்தனமாக செயல்பட்டுவிட்டார். முதல்வர் என்ற முறையில் டிஜிபிக்கு உத்தரவிட்டு அவர்தான் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் என்று மத்திய அரசும், பாஜகவும் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் சரண்ஜித் சிங் சன்னியோ ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் கடுமையாக விளக்கம் அளித்து வருகிறார்.

 சரண்ஜித் சிங் சன்னி

சரண்ஜித் சிங் சன்னி

அதன்படி, பிரதமர் மோடியின் கான்வாயில் எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை. பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் கடைசியில் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார். போராட்டம் 3 மணிக்கே முடியும் என்று கூறப்பட்டது. பாஜக கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள்.

 மோடி கான்வாய்

மோடி கான்வாய்

இதில் உயிருக்கு என்ன ஆபத்து இருக்க முடியும்? உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. போராட்டக்காரர்களிடம் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் பேசி இருக்கலாம். நானும் நம்முடைய பிரதமரை மதிக்கிறேன். அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் உடல் நலத்திற்காக நானும் கடவுளிடம் வேண்டுகிறேன். போராட்டம் செய்வது என்பது மக்களின் உரிமை. அதை தவறு என்று சொல்ல முடியாது. அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பஞ்சாப் முதல்வர் சன்னி விளக்கம் அளித்தார்.

Recommended Video

    BJP VS Congress | Punjab சம்பவம் திட்டமிட்ட சதியா? | PM Modis Convoy Blocked | Oneindia Tamil
     மோடி சர்தார் வல்லபாய் பட்டேல்

    மோடி சர்தார் வல்லபாய் பட்டேல்

    இந்த நிலையில்தான் தற்போது சர்தார் வல்லபாய் பட்டேலை குறிப்பிட்டு சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். சரண்ஜித் சிங் சன்னி செய்துள்ள ட்விட்டில், எவர் ஒருவர் தன்னுடைய அரசியல் பணியை விட தன்னுடைய உயிர்தான் முக்கியம் என்று நினைக்கிறாரோ.. அவர் இந்த இந்தியா போன்ற நாட்டில் உயரிய பொறுப்பு எதையும் பெற்றுவிட கூடாது என்று சர்தார் வல்லபாய் பட்டேல் சொன்ன வாக்கியத்தை நினைவு கூர்ந்து உள்ளார். அதாவது பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறுவதை சரண்ஜித் சிங் சன்னி இவ்வாறு விமர்சித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+