பிஎம் கிசான்.. "ஜாக்பாட்" வருது.. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எவ்ளோ உயருது பாருங்க.. செம குஷி
டெல்லி: நீண்ட நாட்களாகவே, மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விவசாயிகள் விடுத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருகிறதாம். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி கிசான்: இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் எத்தனையோ விவசாயிகள் நாடு முழுவதும் பயன்பெற்று வருகின்றனர்.

அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் இந்த பலன்களை பெறலாம். ஆனால், இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும்.
ஆதாரை இணைத்தால்தான் தவணைத்தொகை கிடைக்கும்.. எனவே, இந்த திட்டத்தின் மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெறுவதற்கான நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்தவாறே உள்ளது.
பயனாளிகள்: மற்றொருபுறம், பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளின் பெயர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டும் வருகிறது... இதனால், பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
இந்த 3 வருடத்தில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையில் 63 சதவீதம் சரிந்துவிட்டதாம். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் கல்வியறிவின்மை காரணமாக, அரசு கேட்கும் தகவல்களை வெப்சைட்டில் அப்லோடு செய்ய முடியாமலும் இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
சரிபார்ப்பு: அதனால்தான், பிஎம் கிசான் திட்டத்தில் பெயர் நீக்கப்பட்ட பயனாளிகள் விரைவில் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யும்படி அரசு தரப்பில் சமீபத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.. அதேபோல, பயனாளிகளின் கணக்கு விவரங்களை சரியாக இணைக்க வேண்டும்.. தவறாக இருந்தாலும், ஆதார் சரிபார்ப்பு முடிக்கப்படாமல் இருந்தால் ரூ.6000 நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.
ஆதார் கார்டு: நம்முடைய கோவை மாவட்டத்திலும் இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்தது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்கள் ஆதார் உடன் வங்கி கணக்கு இணைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார். ஒருவேளை, வங்கி கணக்கு இல்லாதவர்கள் இந்தியா பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கி அதில் ஆதாரை இணைக்க வேண்டும்" என்றும் கூடுதலாக அறிவுறுத்தியிருந்தார்.
அதேசமயம், பணவீக்கமும், விலைவாசியும் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருவதால், பிஎம் கிசான் திட்டத்தின் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்று, நாடு முழுவதிலுமிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டே வந்தது..
இந்த கோரிக்கையையைத்தான் மத்திய அரசு தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேஷம், ராஜஸ்தான் என 4 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிஎம் கிசான் தொகையை, 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
குஷியோ குஷி: தேர்தல் சமயத்தில் வெளியாவதால், பாஜக அரசுக்கு இந்த அறிவிப்பானது, மிகுந்த பலனை பெற்றுத்தரும் என்றாலும், விவசாயிகள் இந்த அறிவிப்பினால் பெருத்த நன்மையையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications