அழைத்த எல்.முருகன்.. உடனே வந்த மோடி! டெல்லியில் தமிழ் புத்தாண்டு விழாவில் பங்கேற்று நெகிழ்ச்சி
டெல்லி: மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நடைபெற்று வரும் தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இருக்கிறார். டெல்லியில் உள்ள எல் முருகன் இல்லத்தில் இன்று தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதில் கலந்துகொண்டு தமிழையும், தமிழ் தலைவர்களையும் புகழ்ந்து பிரதமர் பேசியுள்ளார்.
இன்று உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கென சிறப்பு மேடை அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் எல்.முருகன் அழைப்பு விடுத்து இருந்தார். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது கடைசி வரை உறுதி செய்யப்படாத நிலையில் அவர் நிச்சயம் விழாவில் பங்கேற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கோலாகளமாக தொடங்கியது. விநாயகர் ஆராத்தியுடன் தொடங்கிய இந்த விழாவில், தமிழ் பாடல்கள் ஒலிக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சியில் நடைபெற்றன. இதில் ஏராளமான தமிழ் மக்கள், பாஜகவினர் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார். இந்த விழாவில் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழ் தலைவர்களை நினைவுகூர்ந்து பேசி இருக்கிறார். அவர் ஆற்றிய உரையில் தெரிவித்து இருப்பதாவது, "உலகின் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது.

ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழியை நினைத்து பெருமை கொள்கிறோம்." என்று கூறிய அவர், ராஜாஜி, காமராஜர் ஆகிய தலைவர்களை நினைவுகூர்ந்து நெகிழ்ந்து உள்ளார். தொடர்ந்து பேசிய மோடி, பல்வேறு சாதனைளை செய்த தமிழர்களை நினைவுகூர்ந்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பல முறை நான் பேசி இருக்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications