ஆப்கன் விவகாரம்.. ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?
டெல்லி: ஆப்கன் விவகாரத்தில் இந்தியா இதுவரை வெளிப்படையாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆப்கன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
கடந்த சில வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். தாலிபான்கள் இந்தளவு வலிமையாக இருப்பார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
மளமளவென முன்னேறிய தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி முழுமையாக வெளியேறியது.

ஆப்கன் விவகாரம்
அங்குள்ள வெளிநாட்டினரை தாயகம் அழைத்து வரும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. ஆப்கனில் அடுத்து தாலிபான்கள் ஆட்சி தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், தாலிபான் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஒவ்வொரு நாடும் தனது நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.

பிரதமர் மோடி
அதேநேரம் இந்தியா தாலிபான்கள் விஷயத்தில் வெளிப்படையாக எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காமலேயே இருந்தது. குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி ஆப்கன் விவகாரம் குறித்து இதுவரை எங்கும் பேசவில்லை. இந்தச் சூழலில் ஆப்கன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ஆலோசனை
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் இது பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அதேபோல பலரை உயிரிழக்கக் காரணமாக இருந்த காபூல் பயங்கரவாத தாக்குதலையும் இரு தலைவர்களும் கண்டித்தனர். ஆப்கனில் பாதுகாப்பான நம்பகமான நிலை உருவாக வேண்டியது முக்கியம் என இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். இதில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் ஒன்றியம் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஆப்கன் விவகாரம் குறித்துத் தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ட்வீட்
அதேபோல பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் நிலைமை குறித்து ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் பேசினேன். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

தாலிபான்களுக்கு அங்கீகாரம்?
முன்னதாக தாலிபான்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தாலிபான்களின் அரசியல் அலுவலக பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சந்தித்தார். அஸ்ரப் கானி அதிபராக இருந்த போது, ஆப்கன் அரசுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததால், தாலிபான்கள் விஷயத்தில் என்ன முடிவை இந்தியா எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. சமீப காலமாக நடைபெறும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது மற்ற அண்டை நாடுகளைப் போலவே இந்தியாவும் தாலிபான்களின் தலைமையை விரைவில் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தாலிபான்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications