டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டு.. மோடி பேச்சில் விதிமீறல் இல்லை.. தேர்தல் ஆணையம் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: தீபாவளிக்கு வெடிக்கவா நாங்கள் அணுகுண்டை வைத்திருக்கிறோம் என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதில் எந்த விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தபோது, பயங்கரவாத சம்பவங்களை செய்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் பேசுகையில், "பாகிஸ்தானின் அசசுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். இந்தியா என்ன தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டு வைத்திருக்கிறது" என ஆக்ரோசமாக கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் சில இடங்களில் பிரதமர் மோடி வெறுப்பை உமிலும் வகையில் பேசியதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. ஆனால் இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இதேபோல் அமித்ஷா மீதான புகார் குறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

கணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண் கணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்

11 புகார்கள்

11 புகார்கள்

இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. அப்போது சுஷ்மிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரதமர் மோடி மீது 11 புகார்கள் இருப்பதாக கூறினார்.

2 புகார்கள் விசாரிப்பு

2 புகார்கள் விசாரிப்பு

இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடிக்கு எதிரான இரண்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டிலும் அவர் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

புகாரை விசாரிக்க கெடு

புகாரை விசாரிக்க கெடு

இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரை திங்கள்கிழமைக்குள் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்தது.

மோடி பேச்சு

மோடி பேச்சு

இதையடுத்து ராஜஸ்தான் மாநிலததில் மோடி பேசிய அணுகுண்டு தொடர்பான பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை என தள்ளுபடி செய்துள்ளது. இன்னும் 8 புகார்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.அதன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

English summary
Prime Minister Narendra Modi was given a clean chit by the Election Commission today over nuclear button speech at a rally in Rajasthan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X