பீதி தேவையில்லை.. பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.. மக்கள் ஊரடங்கு.. மோடி சொன்ன 9 முக்கிய யோசனைகள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுக்க பரவலாக, அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
மார்ச் 22ம் தேதி காலை 7 முதல் இரவு 9 வரை மக்கள் வெளியே வர வேண்டாம் - மோடி வேண்டுகோள்
கொரோனா, வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு அவர் அப்போது அழைப்பு விடுத்தார். தனது உரையின் போது முக்கியமான 9 விஷயங்களை அவர் தெரிவித்தார். அவை என்ன என்று பார்க்கலாம், வாருங்கள்:

- மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இது பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் 'மக்கள் ஊரடங்கு' ஆகும். உலகத்திற்கு நமது வலிமையை காண்பிப்பதற்கு இது அவசியம்.
- மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டு பால்கனி, அல்லது ஜன்னலோரம் அல்லது கதவு ஓரம் நின்று கொண்டு ஐந்து நிமிடங்களுக்கு மணி ஓசை எழுப்புவது, கை தட்டுவது, சைரன் ஒலிப்பது போன்றவற்றை செய்யலாம். இது நமக்காக பாடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்களுக்கு செய்யக்கூடிய கவுரவம்.
- 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா நோய் தாக்கம் நமது நாட்டை விட்டு அகலும் வரை, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. எனவே மொத்தமாக பொருட்களை வீட்டில் வாங்கி குவித்து செயற்கை பற்றாக்குறைக்கு வழிவகுத்து விடாதீர்கள்.
- கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கு நிதியமைச்சர் தலைமையில் பொருளாதார பணிக்குழு அமைக்கப்படுகிறது.
- வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்
- பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருங்கள், அத்தியாவசிய தேவை இல்லாவிட்டால், வீட்டை விட்டு வெளியே வரவே வேண்டாம்
- வழக்கமான செக்-அப்புகளுக்காக மருத்துவமனைகளுக்கு இப்போது செல்ல வேண்டாம். தேவையின்றி அச்சப்பட்டு மருத்துவமனைகளில் குவியாதீர்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், அதைத் தயவு செய்து, தள்ளிப்போடலாம்.
- வைரஸ் பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ஊதியத்தில் பிடித்தம் செய்வது உள்ளிட்டவற்றில் எந்த ஒரு தொழில் நிறுவனமும் ஈடுபடாமல், அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டவேண்டும். இவைதான் மோடி தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications