கொரோனா 3வது அலை: ஆக்சிஜன் இருப்பு உற்பத்தி அதிகரிப்பு - மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கொரோனா பரவலின் வேகம் தீவிரமடையும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாடு தயாராகி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் மத்திய அமைச்சர்களுடனான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர் என 77 அமைச்சர்கள் பங்கேற்றனர். காணொலி வாயிலாக இதில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூபாய் 23,000 ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலப்பிரிவு முதல் ஐசியூ வரை, ஆம்புலன்ஸ் வசதி, ஆக்சிஜன் சேமிப்பு ஆகிய அனைத்து வசதிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இன்று பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா பரவலை எதிர்க்கொள்ளவும் ஆக்சிஜன் தேவை, இருப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜனை இருப்பு வைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது போல மீண்டும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications