வம்பு சண்டைக்கு போனதில்ல.. வந்த சண்டையை விடுவதில்ல! பாக்., வாலை ஒட்ட நறுக்கிய இந்தியா! பரபர மீட்டிங்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் முப்படை தலைமை அதிகாரிகளுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. கோடையை அனுபவிக்க காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த கோர சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானின் சிறப்பு பாதுகாப்பு படையில் பாரோ கமாண்டோவாக பணியாற்றிய ஹாசிம் மூசா என்பதும், தற்போது லஸ்கர் இ தொய்ஃபா அமைப்பில் அவன் இணைந்திருப்பதும் தெரிய வந்தது.

இதன் மூலம் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கிடையே பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது முக்கிய இடங்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகளும் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் பயிற்சி மையம் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கை போர் எனக் கூறிய பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்த நிலையில், புதன்கிழமை இரவில் இருந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள் ஏவுகணைகள் இந்திய எல்லைக்குள் வருவதற்கு முன்பே இந்தியாவின் கண்காணிப்பு அமைப்புகள் அவற்றை தாக்கி அழித்தன.
மேலும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்லாமாபாத், கராச்சி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. மேலும் அதன் முக்கிய விமானப் படைத்தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்தது. தொடர்ந்து இரு நாடுகள் இடையே நேரடி போர் ஏற்படும் சூழல் உருவான நிலையில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதற்கு பிறகு இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை ஐந்து மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மே 12ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இதனால் இருதரப்பிடையே அமைதி திரும்பி இருக்கும் நிலையில் பல்வேறு உலக நாடுகளும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் எந்தவித நிபந்தனைக்கும் இந்தியா அடிபணியாது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi holds a meeting with Defence Minister Rajnath Singh, NSA Ajit Doval, CDS and Chiefs of all three Services, at 7, LKM. pic.twitter.com/Zcx3BWo2cA
— ANI (@ANI) May 10, 2025
இதில் வெளியூர் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் போர் நிறுத்தம், இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தப்பி சென்ற தீவிரவாதிகளை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications