Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரே இப்படி செய்யலாமா? என்ன சொல்கிறது “காஷ்மீர் பைல்ஸ்” .. பாயும் காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, நமது நாட்டின் பிரதமரே இப்படிப்பட்ட படத்தை புரொமோட் செய்கிறார் என கூறியுள்ளார்.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள், பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

தி காஷ்மீர் பைல்ஸ்

தி காஷ்மீர் பைல்ஸ்

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி காஷ்மீர் பைல்ஸ் படம் மிகவும் நல்ல படம் என்று கூறியதோடு கூடியிருந்த அனைவரையும் அப்படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

படத்திற்கு எதிராக புகார்

படத்திற்கு எதிராக புகார்

மற்றொரு தரப்பினர் இப்படம் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டிருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான காட்சியமைப்புகள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் புகழ்ந்து வரும் நிலையில், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அந்த படத்தை விமர்சித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மக்களை அப்படத்தில் தவறாக சித்தரித்து இருப்பதாக புகார் அளிக்கப்படுகிறது.

மர்ல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

மர்ல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இந்த படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். "உண்மையை தவறாக சித்தரித்துள்ளது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். ஒரு தலை பட்சமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இளைஞர்களை இந்த திரைப்படம் தவறாக வழிநடத்துகிறது. நமது நாட்டின் பிரதமரே இப்படிப்பட்ட படத்தை புரொமோட் செய்துள்ளார்.

Recommended Video

    யார் மீது தவறு? மாறி மாறி குற்றம்சாட்டும் Congress-BJP.. விவாதத்தை ஏற்படுத்திய Kashmir Files
    பிளவுபடுத்தும் செயல்

    பிளவுபடுத்தும் செயல்

    சமூகத்தின் சூழலை குலைக்கும் வகையில் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். மதத்தின் பெயராலே மீண்டும் நாட்டை பிளவு படுத்துவதற்கான முயற்சிகள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+