ஆபத்தில் இந்திய ஜனநாயகம் என அதிகாரப் பசியில் விமர்சிக்கும் காங்கிரஸ்: மோடி பதிலடி
டெல்லி: இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக அதிகாரப் பசியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் ஏற்கனவே 4 கட்டங்களாக வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இன்னும் 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரதமர் மோடி. முஸ்லிம்கள் வாக்கு வங்கிக்காகவே காங்கிரஸ் அத்தனையையும் செய்கிறது என்பது மோடியின் குற்றச்சாட்டு. பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் பேராபத்தில் சிக்கிவிட்டது என்பது காங்கிரஸின் விமர்சனம்
இந்த விமர்சனங்கள் தொடர்பாக இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி அளித்த பதில்: 2014-ம் ஆண்டு முதல் இன்னொரு கட்சி அதிகாரத்தில் இருப்பதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. அதிகாரப் பசியில் இருக்கிறது காங்கிரஸ். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விவாதங்களுக்கு அழைத்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் புதிய எம்பிக்கள் பலரும் என்னிடம் வந்து 5 ஆண்டுகாலத்தை வீணாக்கிவிட்டோம் என புலம்பி இருக்கின்றனர். உங்கள் கட்சியின் இளம் எம்பிக்கள், முதல் முறை எம்பிக்களை ஒரு மணிநேரம் எங்களுடன் உரையாட விட்டுவிட்டு நீங்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என எதிர்க்கட்சிகளிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினாலும் அதை எதிர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications