டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரவல், எனது புகழை கெடுக்கும் என்று நினைத்தார்கள்.. நடந்தது என்ன? பிரதமர் மோடி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா தொற்று மோடியின் பெயரை கெடுத்து விடும் என பலர் மனதில் நினைத்தார்கள் ஆனால் நடந்தது என்ன?, 100% தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இணைந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

தமிழகத்தில் 1962க்கு பிறகு காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை..ராகுலுக்கு,லோக்சபாவில் மோடி பதிலடிதமிழகத்தில் 1962க்கு பிறகு காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை..ராகுலுக்கு,லோக்சபாவில் மோடி பதிலடி

தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 2020 இரண்டாம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.

ராகுல் ஆவேசம்

ராகுல் ஆவேசம்

தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தியின் தமிழகம் குறித்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தமிழகத்திலும் விவாதத்தை உருவாக்கியது. நாட்டில் ஏஏ வேரியன்ட் உள்ளது. அது 'AA' (Ambani Adani variant). அதானி, அம்பானி வேரியன்ட் இந்திய பொருளாதாரம் முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது. எனக்கு பெரிய தொழிற்சாலைகள் மீது எந்த வெறுப்பும் இல்லை. நீங்கள் அதன் மீது கவனம் செலுத்தங்கள். ஆனால் அவற்றால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது எனப் பேசினார்.

கடுமையான குற்றச்சாட்டு

கடுமையான குற்றச்சாட்டு

மேலும், இந்தியாவில் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 46% சரிவு ஏற்பட்டுள்ளது ஏன் தெரியுமா? நீங்கள் அமைப்பு சாரா தொழிலை நசுக்கிவிட்டீர்கள் எனவும், சிறு குறு நடுத்தர தொழில்துறையை சிதைத்துவிட்டீர்கள். உங்கள் கவனம் எல்லாம் வெறும் 5 முதல் 10 பேர் மீதுதான் என மோடியின் அரசை ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். மேலும் கொரோனா காலத்தில் மத்திய அரசு தோற்று விட்டதாகவும் ராகுல் காந்தி பேசியிருந்தார்.

பிரதமர் பதிலடி

பிரதமர் பதிலடி

இந்நிலையில், கொரோனா தொற்று மோடியின் பெயரை கெடுத்து விடும் என பலர் மனதில் நினைத்தார்கள் ஆனால் நடந்தது என்ன?, 100% தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நூறு வருடங்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய தொற்றினை நாம் எதிர்கொண்டோம், இந்த நாட்டு மக்கள் எத்தகைய துயரை சந்தித்து உள்ளனர், அனைத்து கட்சியினரும் ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றார்.

அரசியல் ஆக்கிய காங்கிரஸ்

அரசியல் ஆக்கிய காங்கிரஸ்

கொரோனா பரவலை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கியது, கொரோனா தொற்று மோடியின் புகழை கெடுத்து விடும் என்று பலர் மனதில் நினைத்தனர். ஆனால் நடந்தது என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரியும், கொரோனா காலத்தில் யோகா மக்களுக்கு உதவியது, இந்த அவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் செயலுக்கு சாட்சியாக உள்ளது, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன் எனப்பேசிய மோடி, கொரோனா காலத்தில் எதிர்கட்சியினர் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பிக்கொண்டிருந்தனர் என்றார். மேலும் 00% தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

English summary
Prime Minister Narendra Modi has said in the Lok Sabha that many people thought that the corona infection would tarnish Modi's name but what happened? We are moving towards the goal of 100% vaccination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X