3 நாள் சுற்றுப்பயணம்.. அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.. பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இதுதான்!
டெல்லி: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதேபோன்று ஐக்கிய நாடுகள் அவையிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இன்று (21 ஆம் தேதி) முதல் வரும் 23 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்காவில் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். குவாட் கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
செப்டம்பர் 22 ஆம் தேதி நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, அங்கு யூனியன்டேலில் உள்ள நாசாவ் கொலிசியம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுக்கிறார். 15 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய இந்த அரங்கில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்து கொள்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான 23 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அன்றைய தினம் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளார்.
இந்த பயணத்தின் போது உக்ரைன் விவகாரம், காசா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உலக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனாலும் இந்திய வெளியுறவுத்துறை இந்த தகவலை உறுதி செய்யவில்லை. அதேவேளையில் மறுக்கவும் இல்லை. இதனால், பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications