இன்று முதல் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள்..9 வந்தே பாரத் ரயில்கள்! எவ்வளவு நேரம் குறையும் தெரியுமா?
டெல்லி: நாட்டின் 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இதனால் பெரும்பாலான வழித்தடங்களில் ரயில் பயண நேரம் கணிசமாக குறைகிறது.
நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும்
புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
இன்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைகள்:
- உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
11 மாநிலங்கள்: ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இந்த 9 வந்தே பாரத் ரயில்கள் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.

பயண நேரம் குறைகிறது: வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இந்த வழித்தடத்தில் தற்போதுள்ள அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது,
ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும்.
ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.5 மணி நேரம் வேகம்;
நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான பயண நேரத்தைக் காட்டிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையும்;
ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம்;
உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் அரை மணி நேரம். வேகமாக செல்லும்.
வழிபாட்டு தலங்கள் இணைப்பு: ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் மற்றும் திருப்பதி யாத்திரை மையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications