பீகார் தேர்தல் முடிந்த ஒரே வாரம்.. நவம்பர் 19ல் கோவை வரும் பிரதமர்.. வேளாண் மாநாட்டில் பங்கேற்பு?
டெல்லி: நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் நடைபெறும் வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக ஜூலை கடைசி வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்த நிலையில், தற்போதைய பயணம் பாஜகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்கும், நேற்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. மொத்தமாக பீகார் சட்டசபைத் தேர்தலில் 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆண்களை விடவும் பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.
இதனிடையே பீகார் தேர்தல் முடிவடைந்த சூழலில், பாஜகவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் நடக்கும் வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பல்வேறு விவசாய சங்கங்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் வருகை தொடர்ச்சியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
கடைசியாக பிரதமர் மோடி ஜூலை மாதம் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வந்தார். அதன்பின் மீண்டும் பிரதமர் மோடி கோவை வரவிருப்பது பாஜகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவையில் பாஜக வலிமையாக இருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் பயணம் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications