ஒருத்தரை விட மாட்டேன்.. பேசிக்கொண்டு இருக்கும் போதே..சட்டென ஆங்கிலத்திற்கு மாறிய மோடி.. கோபம்!
டெல்லி: டெல்லியில் சமீபத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை இந்திய விசாரணை அமைப்புகள், பாதுகாப்பு ஏஜென்சிகள் வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சக்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க பூடான் வந்தடைந்த பிரதமர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இந்தியில் பேசிக்கொண்டு இருந்த பிரதமர் மோடி திடீரென ஆங்கிலத்திற்கு மாறி "குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.. ஒருவர் விடாமல் எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள்" என ஆங்கிலத்தில் அவர் தெரிவித்தார்.
டெல்லி CAR சம்பவம்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை 6.52 மணியளவில் நாட்டையே உலுக்கிய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. போக்குவரத்து சிக்னல் பகுதியில் நின்றிருந்த வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த பயங்கர வெடிப்பு, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போல் பெரிய சத்தத்துடன் நிகழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். காரின் பாகங்கள் பல திசைகளிலும் சிதறி, அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவத்தில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியில் இத்தகையதொரு தாக்குதல் நடந்ததில்லை என்பதால், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்படி, உமர் என்ற நபர் இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவரான அவரே காரை ஓட்டிச் சென்று, செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது கார் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி எச்சரிக்கை
இந்த நிலையில்தான் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சக்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க பூடான் வந்தடைந்த பிரதமர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இந்தியில் பேசிக்கொண்டு இருந்த பிரதமர் மோடி திடீரென ஆங்கிலத்திற்கு மாறி "குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என ஆங்கிலத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவின் கோபத்தையும், தீவிரத்தையும் காட்ட, பிரதமர் மோடி இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாறி உரையாற்றினார். முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப, பீகாரின் மதுபானி பேரணியிலும் இதேபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ஒவ்வொரு தீவிரவாதியையும், அவர்களின் ஆதரவாளர்களையும் இந்தியா கண்டறிந்து தண்டிக்கும் என வலியுறுத்தினார். அதேபோல் இந்த முறை ஆங்கிலத்திற்கு மாறி மோடி பேசி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பை அரசு ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதுவதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஆபரேஷன் சிந்துர் திட்டத்திற்குப் பிறகு, நாட்டிற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் போராகக் கருதுவோம் என அரசு அறிவித்ததால், இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை உலகளவில் உற்று நோக்கப்படும்.
குண்டுவெடிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு பூடான் அஞ்சலி
பிரதமர் மோடியின் வருகையின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ஜியேல் வாங்சக், டெல்லி குண்டுவெடிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்காக பூடானின் திம்புவில் ஒரு சிறப்புப் அஞ்சலி நிகழ்வை நடத்தினார். இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான பூடான் குடிமக்கள் சாங்லிமிதாங் ஸ்டேடியத்தில் திரண்டனர்.
மன்னர் தனது உரையில், "இந்தியாவுக்காகவும், பிரதமர் மோடிக்காகவும் பிரார்த்தனை செய்வோம். இந்தியாவின் மீது அவர் கொண்டுள்ள பார்வையும், சேவையும் வலிமையையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, டெல்லியில் தங்கள் உயிர்களை இழந்த மக்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்" என்று உருக்கமாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications