புவனேஸ்வரில் கான்வாய் புடைசூழ பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது திடீரென வந்த ஆம்புலன்ஸ்.. பாருங்க
புவனேஸ்வர்: புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ இன்று நடந்தது. கான்வாய் புடைசூழ பிரதமர் நரேந்திர மோடி சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமர் மோடி வழிவிட்டார். அவரது கன்வாய்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆம்புலன்சுக்கு வழிவிடுவது இது முதல்முறையல்ல.. ஏற்கனவே இதேபோல் ஒரு சில நேரங்களில் செய்திருக்கிறார்.
ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி 6வது முறையாக இன்று வருகை தந்தார். இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 திட்டங்களை துவக்கி வைத்தார். சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலை மற்றும் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மேலும் புவனேஸ்வரில் பயணிகள் ரயில் ஒன்றையும், புதிய ரயில் வழித்தடத்தையும் துவக்கி வைத்தார். தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களின்படி 100 மின்சார பேருந்துகளையும் பிரதமர் மோடி இன்று புவனேஸ்வரில் துவக்கி வைத்தார். மேலும் ஒடிசாவின் வளர்ச்சி குறித்து பாஜக அரசு தயாரித்துள்ள திட்டமிடுதல் ஆவணத்தையும் வெளியிட்டார்.
முன்னதாக புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ இன்று நடந்தது. கான்வாய் புடைசூழ பிரதமர் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமர் மோடி வழிவிட்டார். அவரது கன்வாய்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடும் வீடியோ வெளியாகி உள்ளது. அரசியல்வாதிகள் வருகைக்காக ஆம்புலன்சுகளை காக்க வைக்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே நடப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் பிரதமர் மோடி அந்த விஷயத்தில் எப்போதுமே கவனமாக இருக்கிறார்.
தனது கான்வாய் வரும் போது, ஆம்புலன்சுகள் வந்தால் கண்டிப்பாக வழிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். புவனேஸ்வரில் மட்டுமல்ல ஏற்கனேவே வேறு சில நகரங்களிலும் பிரதமர் மோடியின் கான்வாய் செல்லும் போது, ஆம்புலன்சுகள் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்களும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். சில நேரங்களில் சில மாநிலங்களில் முதல்வர், கவர்னர் , ஜனாதிபதி வருகைக்காக ஆம்புலன்சுகள் காக்க வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்ககது.
#WATCH | Prime Minister Narendra Modi's convoy gives way to an ambulance during the roadshow in Bhubaneswar, Odisha
— ANI (@ANI) June 20, 2025
(Source: DD) pic.twitter.com/sNmT5EAjcz
இதனிடையே புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி7 மாநாட்டுக்காக கனடா சென்றிருந்தேன். அங்கு என்னை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா வந்துள்ளீர்கள். வாஷிங்டன் வழியாக அமெரிக்கா வந்து திரும்புமாறு கூறினார். விருந்து மற்றும் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அமெரிக்க அதிபரிடம், உங்கள் அழைப்புக்கு நன்றி. புனிதமான ஜெகநாதரின் நிலத்திற்கு (ஒடிசா) வர வேண்டும் என்ற காரணத்திற்காக டிரம்ப்பின் அழைப்பை பணிவாக மறுத்தேன். உங்களின் அன்பும், ஜெகநாதர் மீதான பக்தியுமே என்னை இந்த மண்ணிற்கு வரவழைத்துள்ளது" என்று கூறினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications