ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவரை சந்தித்து நரேந்திர மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று வரும் 30ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 17வது மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.

PM Narendra Modi arrives at the Rashtrapati Bhavan to meet the President

பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி 2 வது முறையாக பிரதமராகிறார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி, மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குடியரசுத் தலைவரை சந்தித்து கடிதம் வழங்கினார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகு பேசிய நரேந்திர மோடி, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றார். புதிய அரசு பல்வேறு நலத்திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+