டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டம்.. திமுக எழுப்பிய பரபர கேள்விகள்

Google Oneindia Tamil News

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள், பாஜகவின் கூட்டணி கட்சிகள் உள்பட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிரந்து கொண்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்துள்ளார்கள். கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அடுத்த 5 நாட்களுக்கு.. இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. சூப்பர் அறிவிப்பு அடுத்த 5 நாட்களுக்கு.. இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. சூப்பர் அறிவிப்பு

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள், உள்பட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிரந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும், மாநிலங்களவை மன்றத் தலைவருமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 யார் யார்

யார் யார்

இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் (டி.எம்.சி) டெரெக் ஓ பிரையன், திமுக எம்பிக்கள் திருச்சி சிவா மற்றும் டிஆர் பாலு, சமாஜ்வாடியின் ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பகுஜன் சமாஜ் கட்சி) தலைவர் சதீஷ் மிஸ்ரா உள்ளிட்ட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அப்னா தளத் தலைவர் அனுப்ரியா படேல், லோக் ஜனதா கட்சித் தலைவர் பசுபதி பராஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 12 பிரச்சனைகள்

12 பிரச்சனைகள்

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, கொரோனா, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் நீட், மேகதாது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தடுப்பூசி உள்ளிட்ட 12 பிரச்னைகள் குறித்து விவாதிக்க திமுக ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து டி.ஆர்.பாலு இன்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

 தமிழக பிரச்சனைகள்

தமிழக பிரச்சனைகள்

அப்போது டிஆர் பாலு கூறுகையில்,. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்சினை உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா குறித்து விரிவாக பேச மத்திய அரசு தயாராக இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டிருககிறது. தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப இருக்கிறோம் என்பதை கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம்" என்றார்.

 கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனைத்து கட்சி கூட்டத்தில் பேசும் போது. "இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில் கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகிறது மத்திய அரசு" என்று கடுமையாக விமர்சித்தார்.

English summary
PM Narendra Modi chairs an all-party meeting at Parliament, a day before the commencement of the Monsoon session
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X