மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் பின்தங்க மாட்டோம்... நம்பிக்கை கொடுக்கும் பிரதமர் மோடி!
டெல்லி: நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக எங்களின் பங்களிப்பை வழங்குவதில் பின்தங்க மாட்டோம் என்று கூறினார்.
Recommended Video

2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை வருகிற 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் தொடர் துவங்கியது
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

மோடி பேட்டி
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நாடளுமன்றம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அடுத்து வரவிருக்கும் 10 ஆண்டுகள் மிகவும் இன்றியமையாதது. நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் பார்வை மற்றும் கனவுகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பின்தங்க மாட்டோம்
சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்துவிட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதை மனதில் வைத்து, கூட்ட அமர்வில் அடுத்த பத்து ஆண்டுகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக எங்கள் பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் பின்தங்க மாட்டோம் என்று நான் நம்புகிறேன்.

மினி பட்ஜெட்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக நமது நிதி அமைச்சர் கடந்த ஆண்டு நெருக்கடியான நிலையில் வெவ்வேறு நிதி ஊக்கத் தொகுப்புகளை 4-5 மினி பட்ஜெட் போல் முன்வைத்தார். எனவே இந்த பட்ஜெட் அந்த 4-5 மினி பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியைப் போலவே இருக்கும் என நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications