ஆட்சிக்கு வந்ததும்.. மாநிலங்களின் நிதியை குறைக்க முயன்ற மோடி.. பிரபல அல் ஜசீரா ஊடகம் குற்றச்சாட்டு
டெல்லி: 2014ல் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுக்க மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிதியை வெகுவாக குறைக்க பிரதமர் மோடி திட்டமிட்டதாக பிரபல அல் ஜசீரா ஊடகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
நாட்டின் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க பிரதமர் மோடி இந்திய நிதி ஆணையமான நிதி ஆயோக் உடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்று அந்த ஊடகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்கு 2 நாட்களுக்கு முன்: ஆனாலும் இந்திய நிதி ஆணையம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசுக்கான வரி பங்கீட்டை குறைப்பது சரியாக இருக்காது என்று எதிர்த்து உள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி மோடி பின்வாங்கும் நிலை ஏற்பட்டது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்ததும்.. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் இந்த ஆலோசனையை ரகசியமாக மேற்கொண்டு உள்ளார். நாட்டின் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறியதை கேட்டு.. நிதி ஆயோக் அதை கடுமையாக எதிர்த்து உள்ளது.
வேறு வழியின்றி கடைசியில்.. பட்ஜெட்டை மொத்தமாக மாற்றி உள்ளனர். அதாவது பட்ஜெட் தாக்கல் செய்யும் 2 நாட்களுக்கு முன் அவசர அவசரமாக மொத்த பட்ஜெட்டையும் வேறு வழியின்றி மாற்றி உள்ளனர். முதலில் உருவாக்கப்பட்ட பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு மிக குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.
அதே நேரத்தில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி குறித்த நிதி ஆயோக் பரிந்துரைகளை வரவேற்பதாக நாடாளுமன்றத்தில் மோடி பொய் பேசி உள்ளார். அதாவது மறைமுகமாக நிதி ஒதுக்குவதை எதிர்த்துவிட்டு நாடாளுமன்றத்தில் அதை வரவேற்பது போல பேசினார்.
குற்றச்சாட்டு வைத்தது யார்?: முக்கியமாக் மோடி மீதான இந்த குற்றச்சாட்டுகளை வைத்ததே நிதி ஆயோக் சிஇஓ பி வி ஆர் சுப்பிரமணியம்தான் என்று அந்த ஊடகம் செய்தியில் கூறியுள்ளது. நிதி ஆயோக் சிஇஓ பி வி ஆர் சுப்பிரமணியம்தான்.. மோடி 2014ல் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தை, அதில் நிதியை குறைக்க திட்டமிட்டது போன்ற செயல்களை செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மோடிக்கும், நிதி ஆயோக் தலைவர் ரெட்டிக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ததே தான்தான் என்று பி வி ஆர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
முதல்முறை இப்படி: அதோடு தற்போதைய மத்திய பாஜக அரசாங்கத்தில் உள்ள ஒரு உயர்மட்ட அரசு அதிகாரி பகிரங்கமாக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பது இதுவே முதல்முறை. அரசுக்கு எதிராக இப்படி நேரடியாக.. அதுவும் மோடிக்கு எதிராக பேசுவது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது, பிரதமரும் அவரது குழுவும் தொடக்கத்தில் இருந்தே மாநிலங்களின் நிதியைக் குறைக்க முயன்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
பி வி ஆர் சுப்பிரமணியம் மோடியின் குட் புக்கில் இருந்தவர் என்று அறியப்படும் நேரத்தில் மோடிக்கு எதிராக பி வி ஆர் சுப்பிரமணியமே புகார் வைப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் பல விஷயங்களை மறைக்கின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வந்தால் வேறு மாதிரி இருக்கும். அதை எல்லாம் கண்டுபிடிக்க ஹிண்டன்பேர்க் போன்ற நிறுவனங்கள்தான் பட்ஜெட்டை ஆடிட் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். அதாவது பட்ஜெட் கணக்குகளின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பும் விதமாக அவர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மாநிலங்களின் நிதியை மத்திய அரசு குறைகிறது என்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் புகார் வைக்கும் நிலையில்தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications