மாம்பழம் சின்னம் முடங்கும்.. அன்புமணியை EC அங்கீகரிக்கவில்லை.. ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்
டெல்லி: அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் டெல்லியில் கூறியுள்ளார். பாமக தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வான போதே அன்புமணி பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது எனவும், தேர்தல் ஆணையத்திடமே அன்புமணி தரப்பு பொய் பேசுகின்றனர் என்றும் அருள் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு நெருங்கும் சூழலில், பாமகவில் தந்தை - மகன் மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை. அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றுள்ள அன்புமணி தரப்பிற்கே தேர்தல் ஆணையமும் கட்சி, சின்னத்தை அங்கீகரித்துள்ளது.

இதனை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்த நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாமகவில் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும், அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் டெல்லியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்திடமே அன்புமணி தரப்பு பொய் பேசுகின்றனர்.
அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. பாமக தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வான போதே அன்புமணி பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது. எனவே விரைவில் மாம்பழம் சின்னமும் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications