மெகா டுவிஸ்ட்.. “இந்தியா” என்ற பெயருக்கு எதிர்ப்பு! 24 எதிர்கட்சிகள் மீது டெல்லி போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டதற்கு எதிராக 24 கட்சிகள் மீது டெல்லி காவல் நிலையத்தில் அவினிஷ் மிஸ்ரா என்பவர் புகாரளித்து இருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில் போட்டியிட முடிவு செய்துள்ளன. கடந்த ஜூன் மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் 2 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்றன.

Police complaint given against name INDIA for opposition alliance in Delhi

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா என்று கூட்டணியின் பெயர் பெயரிடப்பட்டு உள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரிவாக்கத்துடன் முன்மொழிந்த இந்த பெயரை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வழிமொழிந்தார்.

Indian National Democracy Inclusive Alliance, அதாவது. இந்திய தேசிய
ஜனநாயக உள்ளடக்க கூட்டணி என்று மம்தா பானர்ஜி தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி ஜனநாயகத்தை, வளர்ச்சி (Devolopment) என்று வைக்கலாம் என்று ஆலோசனை வழங்கியதை அடுத்து Indian National Devolopment Inclusive Alliance என்று பெயரிடப்பட்டது.

இந்த பெயரை அறிவித்ததில் இருந்தே அது குறித்த விவாதங்களும், விமர்சனங்களுமே ஊடகங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன. மக்கள் மத்தியில் இந்த பெயர் வரவேற்பை பெற்று இருப்பதாக கூறப்படும் நிலையில், பாஜகவினர் இதனை விமர்சித்து வருகிறார்கள். இதில் உட்சபட்சமாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டர் பயோவில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு பாரத் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "பாரத் குறித்து நான் ஒரு ட்வீட் வெளியிட்டேன். ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ட்ஜிட்டல் இந்தியாவை காங்கிரஸ் நினைவூட்டி உள்ளது. அரசியலமைப்பு ஏற்றுக்கொண்ட பெயரான இந்தியா, காலனித்துவ மரபிலிருந்து கடன் வாங்கப்பட்டது. அதேபோன்ற பல மரபுகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பாரதத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நாகரீக மோதல் பெயர்களை கடந்து ஆழமானது. பாரதம் வெல்ல வேண்டும். பாரதம் வெல்லும்." என்று தெரிவித்தார்.

Police complaint given against name INDIA for opposition alliance in Delhi

இந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள பாரகாம்பா காவல் நிலையத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டதற்கு எதிராக 24 கட்சிகள் மீது புகாரளிக்கப்பட்டு இருக்கிறது. அவினிஷ் மிஸ்ரா என்பவர் அளித்த புகாரின்பேரில் இந்தியாவின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் முறையற்ற செல்வாக்கிற்காகவும் ஆளுமைக்காக அப்பெயரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாரகம்பா காவல் நிலைய போலீஸ் மஹாபீர் சிங் தெரிவிக்கையில், புகாரை ஏற்றுக்கொண்டதாகவும் சட்ட அம்சங்கள் அதில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து தங்களின் மூத்த அதிகாரியுடன் பேசி இருப்பதாகவும், அதன் பின்னரே வழக்கை மேற்கொண்டு தொடர்வது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+