டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 மாநிலங்களில் பரபர.. காலையிலேயே பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளுக்குள் புகுந்த போலீஸ்! மீண்டும் ரெய்டு

Google Oneindia Tamil News

டெல்லி: என்.ஐ.ஏ ரெய்டை தொடர்ந்து நாடு முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.

அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

தவறுதான்.. நடந்திருக்க கூடாது.. மன்னிப்பு கேட்டார் அசோக் கெலாட்.. சீற்றம் தணியாத ராகுல், சோனியா! தவறுதான்.. நடந்திருக்க கூடாது.. மன்னிப்பு கேட்டார் அசோக் கெலாட்.. சீற்றம் தணியாத ராகுல், சோனியா!

எஸ்டிபிஐ அலுவலகம்

எஸ்டிபிஐ அலுவலகம்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கோவையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக கட்சி அலுவலகம் வெளியில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

என்.ஐ.ஏ. சோதனை

என்.ஐ.ஏ. சோதனை

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்கள்

போராட்டங்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும், எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் காவல்துறை சோதனை நடத்தி வருகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

English summary
After the NIA raid, police conducting raids in 8 states across the country at the homes of officials belonging to the Popular Front of India, which is ruled by the BJP and its allies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X