டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல் எஜமானர்களுக்கான சேவையில் போலீசார்... கூட்டாச்சியை சிதைக்கும் என ப சிதம்பரம் கவலை

Google Oneindia Tamil News

டெல்லி: ‛‛ஒவ்வொரு மாநில போலீசாரும் தங்களது அரசியல் எஜமானர்களுக்கு சேவை செய்வது என்பது ஏற்கனவே ஆபத்தில் இருக்கும் கூட்டாச்சியை சிதைக்க வழிவகுக்கும்'' என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் தஜிந்தர் பால் சிங் பக்கா. பாஜக மாநில செய்தித்தொடர்பாளர். இவர் காஷ்மீர் பைல்ஸ் உள்பட பல்வேறு விஷயங்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்கள் தெரிவித்ததாக பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்ட சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கொல்கத்தா நீதிமன்றத்தில் ப சிதம்பரம் முற்றுகை! மம்தா அரசுக்கு ஆதரவாக ஆஜரானதால் ஆக்ரோஷம் கொல்கத்தா நீதிமன்றத்தில் ப சிதம்பரம் முற்றுகை! மம்தா அரசுக்கு ஆதரவாக ஆஜரானதால் ஆக்ரோஷம்

போலீசார் மோதல்

போலீசார் மோதல்

இதையடுத்து பஞ்சாப் போலீசார் தஜிந்தர் சிங் பக்காவை டெல்லியில் கைது செய்தனர். அங்கிருந்து பஞ்சாப்புக்கு அழைத்து சென்றனர். குருக்‌ஷேத்ரா நெடுஞ்சாலை அருகே சென்றபோது பஞ்சாப் போலீசாரின் காரை தடுத்து நிறுத்திய அரியானா மாநில போலீசார், டெல்லி போலீசாருக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற டெல்லி போலீசார் தஜிந்தர் சிங் பக்காவை மீட்டு டெல்லிக்கு அழைத்து சென்றனர். மேலும் அவரை கடத்தி சென்றதாக பஞ்சாப் போலீசார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரசியல் சாயம் ஏன்?

அரசியல் சாயம் ஏன்?

இதில் டெல்லி போலீசார் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அரியானா போலீசார் அம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தஜிந்தர் சிங் பக்கா கைது நடவடிக்கையில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.

 ப சிதம்பரம் கவலை

ப சிதம்பரம் கவலை

தஜிந்தர் சிங் பக்கா விவகாரத்தில் பஞ்சாப், டெல்லி, அரியானா மாநில போலீசாருக்கு இடையே நடந்த இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இது ஒருநாள் நிச்சயம் நடக்கும். பஞ்சாப், டெல்லி மற்றும் அரியானா மாநில போலீசாரின் இந்த மோதல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு மாநில போலீசாரும் தங்கள் அரசியல் எஜமானர்களுக்கு சேவை செய்வது என்பது ஏற்கனவே ஆபத்தில் இருக்கும் கூட்டாட்சியை சிதைக்க வழிவகுக்கும்'' என்றார்.

ஜிக்னேஷ் மேவானி கைது விவகாரம்

ஜிக்னேஷ் மேவானி கைது விவகாரம்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் செய்ததாக குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸாம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதனையும் ப சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார். ஒரு மாநில போலீசார் இன்னொரு மாநிலத்துக்குள் சென்று கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட மாநில போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கூட்டாச்சி தத்துவம் கொன்று புதைக்கப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் செய்ததாக குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸாம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதனையும் ப சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார். ஒரு மாநில போலீசார் இன்னொரு மாநிலத்துக்குள் சென்று கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட மாநில போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கூட்டாச்சி தத்துவம் கொன்று புதைக்கப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior Congress leader P Chidambaram has raised the pitch on federalism amid what looks like an ongoing tit-for-tat game between the Centre and Punjab government. He accused the state police forces of "serving their political masters" and warned that the current confrontation between the Punjab, Delhi, and Haryana police is a vision of the future if the police are used in such a manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X