மின்வெட்டு.. 8 நாள் மட்டும் நிலக்கரி இருப்பு.. 8 ஆண்டு பேச்சு என்னாச்சு! மோடியை விளாசிய ராகுல்
டெல்லி: ‛‛8 ஆண்டுகளாக பேசிய பெரிய பேச்சின் முடிவு என்னவென்றால் இந்தியாவில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது. புல்டோசர் வெறுப்புணர்வை கைவிட்டு மின் நிலையங்களை இயங்க செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தென் இந்திய மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சனை புதிதாக ஏற்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தின் பல இடங்களிலும் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இரவில் ஏற்பட்ட மின் துண்டிப்பால் மக்கள் இருளில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல் கர்நாடகம், ஆந்திரா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மோடியை விமர்சித்த ராகுல்
இந்த திடீர் மின்வெட்டுகளுக்கும் நிலக்கரி பற்றாக்குறை தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா உள்பட 12 மாநிலங்களில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து வருகிறது. இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

8 நாள் மட்டுமே நிலக்கரி இருப்பு
‛‛ 8 ஆண்டுகால வார்த்தைஜால பேச்சின் ரிசல்ட் என்பது வெறும் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பது தான். மந்த நிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. மின்வெட்டு என்பது சிறுதொழில்களை நசுக்கி, அதிகமானவர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தி விடும். எனவே புல்டோசர் வெறுப்புணர்வை கைவிட்டுவிட்டு மின் நிலையங்களின் உற்பத்திக்கான சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்
நிலக்கரி துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது கூறி வருகிறார். மேலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் கலவரக்காரர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் பணியை அம்மாநிலங்களில் ஆளும் பாஜக அரசு மேற்கொள்கிறது. இதை தான் மறைமுகமாக ராகுல்காந்தி குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.

அமித்ஷா ஆலோசனை
கோடைக்காலம் துவங்கிய நிலையில் மின்தேவை நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இதற்கு முன்பு எப்போது
இதற்கு முன்பு கடந்த அக்டோபரம் மாதம் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குஜராத், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டது. அப்போது இதேபோல் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications