Delhi blast: உயர் பாதுகாப்பு அடுக்கில் உள்ள டெல்லி செங்கோட்டை பகுதியிலேயே நடந்த கோர சம்பவம்! எப்படி?
டெல்லி: தலைநகர் டெல்லியின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதியான, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிவிபத்தால் 8 பேர் பலியான சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு மிகுந்த ஏரியாவிலேயே நடந்த இந்தக் கோரச் சம்பவம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி உள்ள காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 1 அருகே இருந்த காரில் குண்டு வெடித்துள்ளது. இதனால் அருகே இருந்த 4 வாகனங்கள் வரை தீப்பற்றி சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு மற்றும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிவிபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சில கடைகளும், வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு டெல்லி காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
செங்கோட்டை அருகே இச்சம்பவம் நடந்துள்ளதால், இதில் பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயர் பாதுகாப்பு மிகுந்த ஏரியாவிலேயே நடந்த இந்தக் கோரச் சம்பவம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானாவில் 350 கிலோ வெடிபொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் கார் குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நாளை பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications