முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனை
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனாவும் உறுதியானதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் இருந்த ரத்தக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் இருக்கிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியுள்ளது.

தற்போது அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஆர் ஆர் ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை நீக்க உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அவசரமாக மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு கொரோனாவும் உறுதியாகியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications