"இந்தியா” கூட்டணிக்கு “ஜீரோ” நிதிஷ்குமார் “ஒருங்கிணைப்பாளர்”? டார் டாராக வெளுத்த பிரசாந்த் கிஷோர்
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இதனை கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உட்பட மொத்தம் 26 கட்சிகள் தற்போது வரை இடம்பெற்றுள்ள்ன. பீகார் தலைநகர் பாட்னா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில் "இந்தியா" கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றன. பெங்களூர் கூட்டத்தில்தான் "இந்தியா" கூட்டணி என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து "இந்தியா" கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற உள்ளது. மும்பை "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதேபோல "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் நாளை அணியின் லோகோ- சின்னமும் கொள்கை முழக்கமும் வெளியிடப்பட உள்ளது. மேலும் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிக்கப்படலாம் என்கிற தகவலும் வலம் வருகிறது.
அத்துடன் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற விவாதமும் நாளைய கூட்டத்தில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி; ஜேடியூவைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவதால் பெரும் குழப்பமும் உருவாகி உள்ளது.
இதனிடையே "இந்தியா" கூட்டணி கூட்டம் குறித்து தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. சொந்த மாநிலத்தில் எந்த ஆதரவும் இல்லாதவர் நிதிஷ்குமார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 20,25 எம்.பிக்களை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். ஆனால் நிதிஷ்குமார் நிலைமை அப்படி இல்லை. எந்த பலமுமே இல்லாத நிதிஷ்குமாரை "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்தால் எப்படி சரியாக வரும்?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications