மத்திய அரசின் உயர்தர சுகாதார சேவை திட்டம் "ஆயுஷ்மான் பவ இயக்கம்"- இன்று தொடங்கி வைக்கிறார் ஜனாதிபதி!
டெல்லி: நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான நிகழ்வாக ஆயுஷ்மான் பவ இயக்கம் தொடங்கப்படுகிறது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, 'ஆயுஷ்மான் பவ' இயக்கத்தை காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கம் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (யு.எச்.சி) அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.

இந்த தொடக்க விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர்கள் பாரதி பிரவீன் பவார் மற்றும் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் காணொலி முறையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரங்கள், வட்டாரத் தலைமையிடங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் இருந்து ஏராளமான மக்கள் பிரதிநிதிகள், பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
என்ன திட்டம் இது?: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்படும் 'ஆயுஷ்மான் பவ' இயக்கம், ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன்முயற்சியாகும். இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தில் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது சுகாதாரத் துறை, பிற அரசுத் துறைகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராம பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும்.
புவியியல் தடைகளைத் தாண்டி, ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திற்கு விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், யாரும் பின்தங்கிவிடாமல் அனைவருக்கும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
முன்னதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது ஆயுஷ்மான் பவ முன்முயற்சியின் முக்கியத்துவத்தை மாண்டவியா எடுத்துரைத்தார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications