அடுத்த ஜனாதிபதி யார்?: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்
4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதன் மூலம், விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
டெல்லி: ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் அசுர வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள பாஜக அடுத்ததாக ஜூலையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்குள் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் மீராகுமாரை 65க்கு 35 என்ற விகிதத்தில் வீழ்த்தி வென்றார்.

குடியரசுத்தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது பெற்றுள்ள வெற்றிகள் மூலம், ராஜ்யசபா எம்.பிக்களை அதிகரிக்கும் வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், உத்தர பிரதேசத்தில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் அபார வெற்றியால் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும் அக்கட்சியின் பங்கு முதன்மையானதாகியிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி
இந்தியாவின் குடியரசுத் தலைவரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 776 எம்.பிக்கள் மற்றும் மாநில சட்டசபைகளில் 4,120 எம்எல்ஏக்களைக் கொண்ட வாக்காளர் குழு தேர்வு செய்யும். வாக்காளர் குழுவின் மொத்த வாக்குகள் 10,98,903 ஆகும். அதில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை பாஜக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள்தான்.

வாக்களிக்கும் எம்.பிக்கள்
ஒவ்வொரு எம்.பியின் வாக்கின் மதிப்பும் 708 ஆகும். எம்எல்ஏக்களைப் பொறுத்தவரை, மாநிலத்துக்கு மாநிலம் அவர்களின் வாக்குகளின் மதிப்பு வேறுபடும். உத்தர பிரதேச எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கின் மதிப்பு தலா 208 ஆகும். 5 மாநிலத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ள கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமோக வெற்றி
உத்தர பிரதேசத்தில் 270க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தீர்மானிக்கப்போவது அக்கட்சிதான் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நாட்டிலேயே அதிக அளவாக மொத்தம் 83 ஆயிரத்து 824 வாக்குகள் உள்ளதால் பாஜகவின் வெற்றி குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்தே மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. எனினும் இது குறித்து பாஜக தலைமை இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யும். இந்தத் தேர்தலில் சரத் பவாரையோ, பிகாரின் நிதிஷ் குமாரையோ முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

எதிர்கட்சி வேட்பாளர் யார்
பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டால் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பரிசீலிக்கலாம் என மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறியிருந்தார். இப்போது உள்ள சூழ்நிலையில் நிதீஷ்குமார் அந்த முடிவை எடுப்பாரா என்று தெரியாது. இதுவரை அதிகாரபூர்வமாக யார் பெயரையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கவில்லை.

பாஜகவின் ஆதிக்கம்
ஆனால் நாட்டிலேயே மிக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதனால், பாஜக கூட்டணி மனது வைக்கும் நபரே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 31ல் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலிலும், ஜூலையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பாஜக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications