டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் தோல்வியால் விலைக்குறைப்பு...2014-ல் இருந்தது போல் எப்போது குறைப்பீர்கள்...காங்கிரஸ் கேள்வி

Google Oneindia Tamil News

இடைத் தேர்தல் தோல்வியால் பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. இது வெற்று வார்த்தை, மோடி அரசுக்கு யதார்த்தத்தை மக்கள் காட்டி விட்டனர் எனக் கிண்டல் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா 2014- ல் உள்ளது போல் எப்போது குறைப்பீர்கள் எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியது. அதை தினந்தோறும் நிர்ணயிக்கும் உரிமையை பாஜக அரசு வழங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 ஐ கடந்தது. சில மாநிலங்களில் ரூ.120 வரை விற்பனை ஆகிறது. சரக்கு போக்குவரத்துக்கு முக்கியமானதாக விளங்கும் டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. வியாபாரிகள், கனரக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சரக்கு கட்டண உயர்வால் பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தன.

Price cuts due to election defeat ... When will you reduce prices as they were in 2014 ... Congress question

இந்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரும் கோரிக்கை வந்தது. அதை மத்திய அரசு ஏதேதோ காரணம் சொல்லி தட்டி கழித்து வருகிறது. கடுமையான எதிர்ப்பு காரணமாக, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பல இடங்களில் தோல்வியை தழுவியது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காரணம் என்கிற விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை வாட் வரி லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு... மோடி அரசின் நாடகம்...ரூ.50 குறைத்தால் நிம்மதி... லாலு தாக்கு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு... மோடி அரசின் நாடகம்...ரூ.50 குறைத்தால் நிம்மதி... லாலு தாக்கு

சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியே பெட்ரோல், டீசல் வரி குறைப்புக்கு காரணம் அதனால் தான் மத்திய அரசு வரியை குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்ததாக மத்திய அரசு கூறுவது வெற்று வார்த்தை. 2014 ஆம் ஆண்டில் இருந்தது போன்று விலையைக் குறைக்க முடியுமா. ஏன் இந்த கோரிக்கையை வைக்கிறோம், அதற்கான காரணங்களைக கூறுகிறோம்.

மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.32.90 உயர்த்திவிட்டு, ரூ.5 மட்டும் குறைத்துள்ளது.டீசலில் லிட்டருக்கு ரூ.31.80 உயர்த்திவிட்டு, இப்போது ரூ.10 குறைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் மீது உற்பத்தி வரி லி்ட்டருக்கு ரூ.9.48 பைசாவும், டீசல் லிட்டர் ரூ.3.56 பைசாவும் இருந்தது.

Price cuts due to election defeat ... When will you reduce prices as they were in 2014 ... Congress question

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71.41 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.55.49ஆகவும் இருந்தது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 105.71 டாலராக இருந்தது. ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 82 டாலராக இருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு இணையாக எப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

காங்கிஸ் அரசில் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.9.48ஆகவும், டீசலில் லிட்டருக்கு ரூ.3.56 ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் மீது உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.32.90லிருந்து, 5 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.27ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.31.80லிருந்து, ரூ.10 குறைக்கப்பட்டு, ரூ.21.80 ஆகவும் இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைந்தது...வாகன ஓட்டிகள் நிம்மதி பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைந்தது...வாகன ஓட்டிகள் நிம்மதி

தேர்தல் தோல்வி மூலம் மோடி அரசுக்கு உண்மையின் கண்ணாடியை காட்டிய மக்களுக்குப் பாராட்டுக்கள். அதனால் விலை குறைந்துள்ளது. பிரதமர் மோடிஜி, தேசத்துக்கு வெற்றுவார்த்தைகள் தேவையில்லை. கொடூரமான வரிஉயர்வை திரும்பப் பெறுங்கள்.

மோடிபொருளாதாரத்தின் வெற்றுவார்த்தைகளைப் பாருங்கள். 2021ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.28ம், டீசலில் லிட்டருக்கு ரூ.26 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இடைத் தேர்தலில் 14 தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தவுடன் பெட்ரோல் ரூ.5, டீசல் விலையில் ரூ.10 குறைத்து தீபாவளிப் பரிசு என மார்தட்டிக் கொள்கிறார்கள்". இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

English summary
Price cuts due to election defeat ... When will you reduce prices as they were in 2014 ... Congress question
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X