'விரைவில் நலம் பெறுங்கள் ராகுல்'.. பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
டெல்லி: ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ட்வீட் செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. நாட்டின் முக்கிய நபர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் ராகுல்காந்தி விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களவை எம்பி ராகுல் காந்தி விரைவாக கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும். அவர் சீக்கிரம் உடல் ஆரோக்யத்திம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டேன். அவர் விரைவில் குணமடைந்து முழு நலம் பெற வாழ்த்துகிறேன். அனைவரும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார். இதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம், பாஜகவின குஷ்பு, ஸ்மிதி இராணி உள்ளிட்ட பலரும், ராகுல் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் செய்துள்ளனர்.
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications