சிறுதானிய உணவுகள் ரொம்ப முக்கியம்.. தொல்காப்பியம், புறநானூறை மேற்கோள்காட்டி பிரதமர் மன் கி பாத் உரை
டெல்லி: இன்று காலை 11 மணிக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்க்கு சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும், நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் சொல்லியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. பிரதமர் மோடியின் 92-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.

நீர் நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை
குறிப்பாக தண்ணீரின் முக்கியத்தும் பற்றியும் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், தண்னீரின் முக்கியத்தும் பற்றி நாம் அனைவரும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நமது கலாசாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நீரை பாதுகாப்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அவை இன்றைக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. வருங்கால சந்திக்காகாவும் நாட்டிற்காகவும் நீர் நிலைகளை பாதுக்காப்பது அனைவரின் கடமையாகும்.

மக்கள் இயக்கமாக மாற்றம்
4 மாதங்களுக்கு முன்பாக நீர் நிலைகளை பாதுகாத்தல் மற்றும் புத்துப்பிப்பது தொடர்பாக பேசியிருந்தேன். இதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் இது குறித்து தீவிரம் காட்டப்படுவதுடன் பல தன்னார்வ அமைப்புகள் இதை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளன. பருவமழை காலத்தில் இயற்கை நமக்கு அளிக்கும் கொடையான மழை நீரை பாதுகாப்பது நமது கடமையாகும். தொடர்ந்து அவர் பேசும்போது, ''ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இருந்து நாடு விடுபட ஜலஜீவன் திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது.

சிறு தானியங்களின் பயன்பாடு
ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாட்டு மக்கள் மற்றும் நம்முடைய சிறு விவசாயிகள் பயன்பட கூடிய வகையிலான, சிறு தானியங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறுதானிய உணவுகள் எவ்வளவு ஆரோக்கியம் வாய்ந்தது என்பதை தற்போதுள்ள இளைஞர்கள் அறிந்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக கொண்டாப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குறுகிய கால அறுவடை பயிர்கள்
நமது கலாசாரம் மற்றும் பண்பாடுகளில் சிறுதானியங்கள் , பருப்பு வகைகள் ஒரு அங்கமாக உள்ளது. தொல்காப்பியம், புறநானூறு ஆகிய இலக்கியங்களில் சிறுதானியங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறுதானியங்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சிறுதானிய பயிர்கள் குறுகிய கால அறுவடை பயிர்கள் ஆகும். இதனால், இவற்றிற்கு அதிக அளவில் தண்ணீரும் தேவைப்படாது.

ஆரோக்கியமான உணவு
சிறுதானியங்கல் ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. இன்றைய தலைமுறையினர் ஆரோக்கிய வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துக்கின்றனர். ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட சிறுதானியங்கள், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். சிறுதானியங்களால் பல நலன்களை கொண்டது. நமது உடலியல் பிரச்சினைகளை தீர்க்கவல்லது. இதயபிரச்சினை, நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைகவும் சிறுதானியங்கள் தீர்வாக உள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதில் சிறுதானியங்கள் நல்ல பலனளிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications