டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோ பைடனுடன் பேசினேன்.. வாழ்த்துக்கள் தெரிவித்தேன்... பல்வேறு பிரச்சினைகளை அலசினோம்.. பிரதமர் டுவிட்!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.

பிராந்திய பிரச்சினைகள், காலநிலை மாற்றம் தொடர்பாக பேசினோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வருகிறது என நாங்க சொல்லவே இல்லையே... மோடிக்கு ராகேஷ் திகாயத் பதில்குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வருகிறது என நாங்க சொல்லவே இல்லையே... மோடிக்கு ராகேஷ் திகாயத் பதில்

ஜோ பைடன் பதவியேற்பு

ஜோ பைடன் பதவியேற்பு

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

ஜோ பைடன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஜோ பைடன் பதவியேற்றதும் அவருக்கும், கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிலையில் ஜோ பைடன் உடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம்

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம். மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டோம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம்

இந்தோ-பசிபிக் பிராந்தியம்

ஜோ பைடன் மற்றும் நான் விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கிற்கு கடமைப்பட்டுள்ளோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கு மூலோபாய கூட்டாட்சியை பலப்படுத்த எதிர்நோக்கியுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவருடன் பிரதமர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Modi took to Twitter to congratulate US President Joe Biden. Modi said that we talked about regional issues and climate change
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X